ஹோம் /தேனி /

தேனியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குதலை தொடங்கிவைத்த ஆட்சியர்

தேனியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குதலை தொடங்கிவைத்த ஆட்சியர்

X
பொங்கல்

பொங்கல் தொகுப்பை வழங்கும் ஆட்சியர்

Theni | தேனி மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குதல் இன்று தொடங்கியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்திலுள்ள 546 நியாய விலை கடைகளிலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் அறிவுறுத்தல் படி, தேனி மாவட்டத்தில் உள்ள 546 ரேஷன் கடைகளில் இன்று பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் 1,000 ரூபாய் வழங்குவதை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் இன்று துவக்கி வைத்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் தொகுப்பை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கரும்பை வாங்கும் முதியவர்

அதன்படி இந்த வருடம் தமிழக அரசு அறிவித்துள்ள ரொக்கப் பணம் ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, ஒரு நீல கரும்பு ஆகிய பொங்கல் சிறப்பு தொகுப்பினை நியாயவிலை கடைகளில் டோக்கன் பெற்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு உத்தரவின் பெயரில் கடந்த 3-1-23 அன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டதாரர்களும் டோக்கன்கள் வழங்கப்பட்டன.

இன்று தமிழக முதலமைச்சர் சென்னையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பச்சரிசி, சக்கரை, முழு கரும்பு மற்றும் ரொக்கப் பணம் ஆயிரம் ரூபாயை பணத்துடன் சென்னையில் தமிழக முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

இந்த நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் இருக்கும் 546 ரேஷன் கடைகளில் உள்ள 4,26,872 குடும்ப அட்டதாரருக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதை, 09/01/2023 இன்று தேனி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கடையில் தேனி மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.

ஒரு நாளைக்கு ரேஷன் கடைகளில் 250 குடும்ப அட்டதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் நின்று பொங்கல் தொகுப்பை வாங்கி செல்கின்றனர்.

பானை, தட்டின் மீது நின்று பரதநாட்டியம்.. தேனியில் தாய், மகள் உட்பட 63 மாணவிகள் உலக சாதனை!

இந்த நிகழ்ச்சியில் தேனி நகர மன்ற தலைவர் ரேணுகா பாலமுருகன், தேனி நகர்மன்ற துணைத் தலைவர் செல்வம் , தேனி ஊராட்சி ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி, தேனி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni