ஹோம் /தேனி /

விவசாயிகள் அதிருப்தி அடைய வைத்த சின்னமனூர் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல்..

விவசாயிகள் அதிருப்தி அடைய வைத்த சின்னமனூர் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல்..

தேனி

தேனி

Theni District News | தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள கணக்கு வேலாயி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சின்னமனூர் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி 2 மற்றும் 4 உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது .

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறிப்பாக நீர்நிலைகள் சார்ந்த மாவட்டங்களில் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் இயங்கி வருகிறது. 2000 ஆண்டின் போது தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் நீர் பாசன மேலாண்மை அமைப்புச் சட்டம் மூலமாக உருவாக்கப்பட்டது நீரினை பயன்படுத்துவோர் சங்கம். இந்த சங்கத்தின் தலைவர் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தேர்வு அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல் பெயரில் மாவட்டத்தில் உள்ள பட்டா வைத்துள்ள விவசாயிகள் வாக்குப்பதிவாளர்களாக கொண்டு அவர்களது வாக்குப்பதிவின் அடிப்படையில் பொறுப்பாளர் தேர்வு நடைபெறும்.

நீரினை பயன்படுத்துவர் சங்கம் முறையாக இயங்குவில்லை என குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. நீர்நிலைகள் சார்ந்த மாவட்டங்களில் இந்த சங்கம் முறையாக செயல்பட்டால் நீர் சார்ந்த பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்கும் என்பது விவசாயிகளின் பார்வையாக உள்ளது.

அந்த வகையில் தமிழ்நாடு நீர்னை பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல் தமிழக அரசால் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க:  தேனி வீரபாண்டி தடுப்பணையில் எடுக்கப்பட்ட பிரபல நடிகர்களின் ஹிட் திரைப்படங்கள்

சங்கத்திற்கான தேர்தல் :-

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் அக்டோபர் எட்டாம் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சின்னமனூர் பகுதியில் உள்ள கணக்கு வேலாயி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மற்ற மாவட்டங்களுக்கான தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் பதவிக்கு போட்டி நிலவியதால் தேர்தல் நடத்தப்பட்டது.

மேலும் படிக்க:  தேனி மாவட்டத்தின் அருமை, பெருமைகளை கூறும் அருங்காட்சியகம்.! இங்கு இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா..!

சின்னமனூர் நீர்நினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டியிட்டும், சின்னமனூர் ஆட்சி மண்டல தொகுதி ஒன்று மற்றும் மூன்றுக்கு பொறுப்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஆட்சி மண்டல தொகுதி இரண்டு மற்றும் நான்கில் தலா இரண்டு வேட்பாளர்கள் விதம் மொத்த 4 வேட்பாளர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

குறைவான வாக்கு பதிவு :-

1513 வாக்காளர்கள் கொண்ட தேர்தலில் 250க்கும் குறைவான வாக்குகளை பதிவாகி உள்ளது. இந்த குறைவான வாக்குப்பதிர்களுக்கு காரணம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்க தேர்தலுக்கான விழிப்புணர்வை தமிழக அரசு முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடைபெறாமல் இருந்ததற்கு காரணம் விவசாயிகளுக்கு இந்த தேர்தல் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் பொறுப்பாளர்கள் போட்டியின்றி இன்றி மற்ற மாவட்டங்களுக்கு தலைவராக உள்ளதாகவும் சின்னமனூர் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க:   தேனி மக்களுக்கு ஒரு நல்ல செய்தி.. இனி போடியில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் வர போகுதாம்..!

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பதிவான வாக்குகளின் இறுதி முடிவை அக்டோபர் எட்டாம் தேதி மாலைக்குள் உத்தம்பாளையம் வட்டாட்சியர் அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

Published by:Arun
First published:

Tags: Local News, Theni