ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த தலைமை காவலர்.. ஆசிய அளவில் சாதனை புரிய தீவிர பயிற்சி..  

தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த தலைமை காவலர்.. ஆசிய அளவில் சாதனை புரிய தீவிர பயிற்சி..  

X
தலைமை

தலைமை காவலர் மாரியப்பன்

Theni District News : தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய பசிபிக் மாஸ்டர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலராக பணியாற்றி வரும் மாரியப்பன் தயாராகி வருகிறார்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். காவல்துறையில் பணியில் சேர்ந்த பொழுதும் கூட இவருக்கு விளையாட்டு துறையில் இருந்த ஆர்வம் தொடர்ந்துள்ளது.

மத்திய அரசின் மாஸ்டர் கேம் பெடரேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 30 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட நபர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெறும். இந்தாண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மே 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காக மாஸ்டர் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு (MAST) சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 காவலர்கள் சென்றனர்.

இதையும் படிங்க : தேனியில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்கள்... ஒருமுறையாவது சென்று வாருங்கள்.....

இந்த போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்ட கம்பம் வடக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவல் அதிகாரி மாரியப்பன் வட்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கமும் , குண்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கமும் , சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தையும் வென்று இருந்தார் .

தேசிய அளவில் நடைபெறும் இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 12 காவலர்கள் பங்கு பெற்ற நிலையிலும் கூட, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் மாரியப்பன் மட்டுமே வெற்றி பெற்று பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற காவலர் மாரியப்பனுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது ஆசிய அளவில் நடைபெறும் ஆசிய பசிபிக் மாஸ்டர் போட்டிகளில் பங்கேற்க கம்பம் வடக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் மாரியப்பன் பங்கேற்க உள்ளார்.

இதையும் படிங்க : ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகைக்கு தேனி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்த போட்டியானது அடுத்த ஆண்டு மே 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை தென்கொரியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தொடர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார் காவலர் மாரியப்பன்.

தினசரி பணிநேரம் முடிந்த பின்பு மாலை வேலைகளில் தொடர் பயிற்சி மேற்கொண்டு வரும் மாரியப்பன் ஆசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற்று பதக்கங்களை வென்று தமிழ்நாட்டு காவல்துறைக்கும் தேனி மாவட்ட காவல் துறைக்கும் பெருமை சேர்ப்பேன் என்று உறுதி கூறுகிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடர்ந்து மாரியப்பன் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்களை வெல்வதற்கு பொருளாதார உதவி கிடைத்தால் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்வதற்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Theni