ஹோம் /தேனி /

போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக Anti Drug Club தொடங்கிய தேனி காவல்துறை..

போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக Anti Drug Club தொடங்கிய தேனி காவல்துறை..

 கம்பம்

கம்பம்

Theni Police Department | தேனி மாவட்ட காவல்துறை சார்பில் அரசியல் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்ட்டி டிரக் கிளப் ( ANTI DRUG CLUB) என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கம்பம் தெற்கு காவல் நிலையத்தின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்கள் சக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆன்ட்டி டிரக் கிளப் இயக்கத்தை தொடங்கி போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது .

தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பில் போதைப் பொருள்கள் பழக்கத்தை குறைப்பதற்காக பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்ட காவல்துறையினர் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் பற்றியும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அதிகமாக போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதை அறிந்த காவல்துறையினர், பள்ளி கல்லூரிகளில் அதிகமாக போதை பொருள் பழக்கத்திலிருந்து மாணவர்கள் விடுபடுவதற்கு விழிப்புணர் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என முடிவு செய்து மாவட்ட முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க:  தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல சினிமா இயக்குனர்கள் யாரெல்லாம் தெரியுமா?

அந்த வகையில் தேனி மாவட்ட காவல்துறை சார்பில் அரசியல் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்ட்டி டிரக் கிளப் ( ANTI DRUG CLUB) என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் தேனி மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த இயக்கம் தொடங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா தலைமையில் கம்பம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆன்டி ட்ராக் கிளப் இயக்கம் தொடங்கப்பட்டது .

இந்த நிகழ்வில் கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா, காவல் உதவி ஆய்வாளர் ஜெயபாண்டி, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர் .

மேலும் படிக்க:  அஜித்துக்கு இப்படியும் ஒரு ரசிகரா.?! துணிவு படத்துக்காக குலுக்கல் போட்டி.. பைக், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட 61 பரிசுகள் வெல்ல நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!!

ஆசிரியர்கள் தெரிந்திருப்பது அவசியம் :-

போதைப் பொருள் ஒழிப்பில் ஆர்வமுள்ள தேர்வு செய்யப்பட்ட பத்து மாணவர்கள், ஆசிரியர் ஒருவர் ஆகியோர்களை கொண்டு இயங்கும் இந்த அமைப்பு சக பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் மற்றும் அதன் பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை விழிப்புணர்வாக எடுத்துரைப்பர். பள்ளி மாணவர்கள் நேரடியாக தங்களுடைய சக நண்பர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும்பொழுது போதைப் பொருள் பயன்பாட்டை குறைக்க முடியும் என்கின்றனர் காவல்துறையினர். தேனி மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பள்ளியிலும் இந்த அமைப்பு செயல்பட உள்ளது இந்த அமைப்பு உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில் , " ஹான்ஸ், குட்கா, பான் மசாலா, கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருள்களுக்கு ஒரு சில மாணவர்கள் அடிமையாக உள்ளனர். பள்ளி நேரங்களில் பாடம் நடத்தப்படும் போதும் கூட போதைப்பொருட்களை பயன்படுத்தியவாறே உள்ளனர் . இதனைக் குறைக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல எந்தெந்த போதை பொருட்களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் என்ற விளக்கமும் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டது . மாணவர்கள் பயன்படுத்தும் போதை பொருட்களை ஆசிரியர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குறிப்பாக பெண் ஆசிரியர்கள் மாணவர்கள் எந்த வகையான போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்து இருந்து மாணவரை கண்டிக்க வேண்டும் எனவும், காவல்துறை அதிகாரிகளால் விழிப்புணர்வு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டாலும் போதைப்பொருள் ஒழிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்கள் தங்களுடைய சக நண்பர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும்போது போதை பொருளுக்கு அடிமையான மாணவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா தெரிவித்தார்.

Published by:Arun
First published:

Tags: Local News, Theni