ஹோம் /தேனி /

ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய தேனி காவல்துறையினர்.. 

ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய தேனி காவல்துறையினர்.. 

தேனி

தேனி

Theni District Police | கம்பம் பகுதி பொது மக்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காக கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் , தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதற்காக காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும்  தமிழகம்:

தமிழகத்தில் வாகனங்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்த நிலையில் , சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் வரிசையில் தமிழகமும் உள்ளது. சாலை விபத்துகளினால் உயிரிழப்புகள் அதிகமாக நடைபெறுவதால் சாலை விபத்துகளை குறைப்பதற்கு காவல்துறை சார்பிலும் அரசின் சார்பிலும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு விழிப்புணர்வு, பிரச்சாரங்கள் செய்யப்படும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர் .

அரசின் சார்பில் சாலை விபத்துகளை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் , வாகன ஓட்டிகள் முறையாக போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் சாலை விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்ற வந்த வண்ணம் உள்ளது. இதனால் மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வந்தது. இதன் மூலம் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. இந்த உத்தரவை மாநில அரசுகள் முறையாக பின்பற்ற வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.

அதன்படி திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் நேற்று முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது . சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் உள்ள காவல்துறை அதிகாரிகள் மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றாத நபர்களுக்கு புதிய அபராத தொகையை விதித்தனர் .

கம்பம் நகரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி :-

அந்த வகையில் தேனி மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் தேனி மாவட்டம் முழுவதும் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில் அபராத தொகையாக விதிக்கப்பட உள்ள தொகை குறித்த அறிவிப்பு பலகை கம்பம் போடி தேனி உட்பட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் கம்பம் நகரில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களான காந்தி சிலை அருகிலும் பேருந்து நிலைய சிக்னல் அருகிலும் வடக்கு காவல் நிலையம் அருகிலும் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கம்பம் பகுதி பொது மக்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காக கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலும், கம்பம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஞானபண்டிதநேரு உட்பட காவல் துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத நபர்களை எச்சரித்ததுடன் , முறையாக போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி ஹெல்மெட் சீட் பெல்ட் அணிந்து வந்த நபர்களை பாராட்டி இனிப்புகள் வழங்கினர்

Published by:Arun
First published:

Tags: Local News, Theni