தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் பொதுமக்கள் வாங்கும் தங்கத்திற்கு கம்ப்யூட்டர் பில் அளிக்கப்படும் நிலையில் தங்கம் வாங்கும் பொதுமக்களுக்கு தங்க நகைகளுக்கான செய்கூலி சேதாரம் பற்றி முழுமையான விவரம் தெரிவிப்பதில்லை எனக் கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகரச் செயலாளர் காஜாமைதீன் தலைமையில் தேனி- அல்லி நகரம் பகுதியில் உள்ள தங்க நகை கடைகளை தேனி ஆட்சியர் ஆய்வு செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி அல்லிநகரம் பகுதியில் செயல்பட்டு வருகின்ற தங்க நகை கடைகளில் பொது மக்கள் வாங்கும் தங்க நகைகளுக்கு கம்ப்யூட்டர் பில் வழங்கப்படுகிறது.
ஆனால் தங்க நகைகளுக்கு செய்கூலி சேதாரம் ஐந்து சதவீதம் முதல் 30 சதவீத வரை மக்களிடம் பணம் பறிக்கப்படுகிறது எனவும், ஆபரண தங்கத்தின் விலை ஒரு பவுன் சுமார் 45 ஆயிரம் ரூபாய். ஒரு பவுன் தங்கம் எட்டு கிராம் ஆகிறது. இந்த எட்டு கிராம் தங்கத்தில் எத்தனை கிராம் செம்பு கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது என்ற எந்த விவரமும் தங்க நகை வாங்கும் பொது மக்களுக்கு தெரியப்படுத்துவதில்லை.
இதனால் திருமணம் போன்ற நிகழ்வு நாட்களில் தங்க நகை வாங்கும் பொதுமக்கள் பலர் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாற்றம் அடைகின்றனர் எனக் கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்கத்தில் கலப்படம் செய்யப்படும் செம்புக்கும், தங்கத்தின் விலையை கடைக்காரர்கள் வசூல் செய்கிறார்கள் எனவும், இவற்றை தடுக்க தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனி குழு அமைத்து தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ள தங்க நகை கடைகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
RRR முறையில் கட்டப்பட்ட அழகிய வீடு- தேனி பொறியாளரின் புது முயற்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni