முகப்பு /தேனி /

தேனியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம் - காரணம் என்ன?

தேனியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம் - காரணம் என்ன?

X
பாமக

பாமக போராட்டம்

Theni PMK protest | தேனியில் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பா.ம.கவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாட்டாளி மக்கள் கட்சி தேனி நகரச் செயலாளர் காஜா மைதீன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ’அல்லிநகரம் பனசல் ஆற்று கூட்டு குடிநீர் திட்டம் செயல் இழக்க காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கிராமப்புற மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களிடம் செம்புக்கும் சேர்த்து பணம் வாகும் மோசடி தங்க நகை கடைகளை தடை செய்யவும் கோரி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் மாவட்டச் செயலாளர் திருப்பதி,மாவட்ட மகளிர் அணித் தலைவி பிரியா முருகேஸ்வரி, தேனி வடக்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி, தேனி தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், தேனி மாவட்ட துணை தலைவர் சரவணகுமார், போடி நகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

First published:

Tags: Local News, Theni