Union
Budget 2023

Highlights

ஹோம் /தேனி /

தேனி : தி.மு.க அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி- தொடங்கிவைத்த ஆட்சியர்

தேனி : தி.மு.க அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி- தொடங்கிவைத்த ஆட்சியர்

X
தேனி

தேனி ஆட்சியர்

Theni | தேனியில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

"ஓயா உழைப்பின் ஓராண்டு மற்றும் கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி" என்கிற தலைப்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்க்ரே ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய மாநில அரசின் திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டு விளக்கப்பட்டிருந்தது.

புகைப்பட கண்காட்சியில் ஆட்சியர், எம்.எல்.ஏ

இதில் இடம் பெற்று இருந்த சர்வதேச சிறுதானிய ஆண்டை குறிக்கும் பாரம்பரிய சிறுதானிய உணவுகள், மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் கீழ் வழங்கப்படும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருட்கள் உள்ளிட்டவை பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

பின்னர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற பரதநாட்டியம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

சுருளி அருவியில் குளித்து மகிழ திட்டமா? - வனத்துறையின் இந்த அறிவிப்பை முதலில் படியுங்கள்

மேலும் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பாரம்பரிய உணவு வகைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கேக் வெட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni