முகப்பு /தேனி /

தேனி கண்ணகி கோவில் வழிபாடு.. இந்து சமய அறநிலையத்துறையே நடத்த வேண்டி மனு !

தேனி கண்ணகி கோவில் வழிபாடு.. இந்து சமய அறநிலையத்துறையே நடத்த வேண்டி மனு !

X
மனு

மனு அளித்த மக்கள்

Theni |  தேனி மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் கண்ணகி கோவில் வழிபாட்டை இந்து சமய அறநிலையத்துறை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.  

  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற கண்ணகி கோவில் திருவிழா மே 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழாவை முன்னிட்டு அனைத்து வழிபாடுகள் மற்றும், அன்னதானம் வழங்குதலை இந்து சமய அறநிலையத்துறை மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என கூடலூர் கண்ணகி பக்தர்கள் சார்பில் தேனி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து தேனி மாவட்டம் கூடலூர் கண்ணகி பக்தர்கள் சார்பில் சதீஷ் பாபு என்பவர் தலைமையில் வந்த கண்ணகி பக்தர்கள் தேனி ஆட்சியரிடம் பல கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தனர் . தமிழக கேரள வன எல்லையில் அமைந்துள்ளது மங்கல தேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ளது.

ஒரே ஒரு நாள் மட்டும் நடக்கும் இந்த திருவிழாவை மூன்று நாட்கள் நடத்த அனுமதிக்க வேண்டும். கோவிலில் அனைத்து வழிபாடுகள் மற்றும், அன்னதானம் வழங்குதலை இந்து சமய அறநிலையத்துறை மூலம் மட்டுமே நடத்த வேண்டும்.

இதையும் படிங்க | குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கும் மதுரை ஈகோ பார்க்.. மதுரைவாசிகள் கவலை!

கண்ணகி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக குமுளி மலை அடிவாரம் லோயர்கேம்ப்பில் இருந்து கோயில் வரையிலான சாலை அமைக்க அறிவிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய் நிதியை வழங்கி பணிகளை தொடர வேண்டும்.

top videos

    கண்ணகி கோவிலுக்கு சென்று வர கேரள குமுளியைப் போலவே தமிழகத்தின் தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், லோயர்கேம்ப்பில் இருந்து ஜீப்கள் இயக்க அனுமதிக்க வேண்டும். ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனு தேனி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டதாக கண்ணகி பக்தர்கள் கூறினர்.

    First published:

    Tags: Local News, Temple, Theni