தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோவிலில் வைகாசி விசாகம் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும், நந்திக்கும், முருகனுக்கும், நாகராஜனுக்கும் 108 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது . அருள்மிகு ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோயில் ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் பிரத்யேக சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த கோவிலில் உள்ள அதிகார நாகராஜனுக்கும், நந்தீஸ்வரருக்கும் வைகாசி மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் சிவனுக்கும் அதிகாரநந்தீஸ்வரருக்கும் தாமரைப்பூ, ரோஜாப்பூ ,அரளிப்பூ, மல்லிகை பூ உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் நந்தி பூஜை
நந்தீஸ்வரருக்கும் சிவனுக்கும் பால் அபிஷேகம் , சந்தனபிஷேகம், தயிர் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், செந்துருக்கம் அபிஷேகம், நெய் அபிஷேகம், தேன் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் மற்றும் பல அபிஷேகங்கள் நடைபெற்றன.
இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிரதோஷத்தை முன்னிட்டு தயிர் சாதம், வெண்பொங்கல், புளி சாதம், சக்கரை பொங்கல், லெமன் சாதம் ஆகியவைகளை வைத்தும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோவில் நாகராஜனுக்கு பூஜை..
இந்த வைகாசி விசாகம் பிரதோஷத்தில் முருகனுக்கும் சிவனுக்கும் அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் தொழில்கள் நல்ல முறையில் நடைபெறும், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி பூஜைக்கான ஏற்பாடுகளை டாக்டர் மகாஸ்ரீராஜன் செய்திருந்தார்..
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.