Home /theni /

அம்மாடியோவ்.. நம்ம கே.கே.பட்டி கிராமத்துக்கு இப்படி ஒரு சிறப்பா? காந்தியை கடவுளாக வழிபடுவது ஏன்?

அம்மாடியோவ்.. நம்ம கே.கே.பட்டி கிராமத்துக்கு இப்படி ஒரு சிறப்பா? காந்தியை கடவுளாக வழிபடுவது ஏன்?

தேனி

தேனி - கே.கே.பட்டி காந்தி கோவில்

Gandhi Temple in Theni KK Patti Village : தேனி மாவட்டம் கம்பம் அடுத்துள்ள காமயகவுண்டன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்திக்கு கோவில் ஒன்றை  கட்டி அவரை கடவுளாகவே வழிபட்டு வருகின்றனர் இவ்வூர் மக்கள். இதன் வரலாற்று பின்னணியை தெரிந்து கொள்வோமா...

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni
மகாத்மா காந்திக்கு கோவில் கட்டி தெய்வமாக வழிபட்டு வரும் கம்பம் அடுத்துள்ள கே.கே.பட்டி கிராம மக்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே உள்ள கே.கே. பட்டி என சுருக்கமாக அழைக்கப்படும் காமய கவுண்டன்பட்டி கிராமத்தில்  மகாத்மா காந்திக்கு பிரத்யேக  கோவில் கட்டி பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். காமயகவுண்டன்பட்டி கிராமத்திலிருந்து பலர் நாட்டின் சுதந்திரத்திற்காக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் தங்களை அதிகளவில் ஈடுபடுத்தி கொண்டு காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வந்துள்ளனர்.

இக்கிராமத்திற்கு சுதந்திர போராட்ட காலங்களில் பல்வேறு தலைவர்கள் வருகை தந்து மக்களுக்கு சுதந்திர உணர்வை விதைத்துள்ளனர்.

நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த பின்பு காந்திஜீயின் கொள்கைகளையும், நடைமுறைகளையும் அடுத்து வரும் சந்ததியினரும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக, இக்கிராமத்தில் மகாத்மா காந்திக்கு 1985ம் ஆண்டு கோவில் கட்டியுள்ளனர். இக்கோவிலில் காந்திக்கு வெண்கலத்தினால் ஆன முழு உருவ சிலையை அமைத்துள்ளனர் . மகாத்மா காந்தியின் அஸ்தி இக்கோயில் அமைந்துள்ள பீடத்தின் கீழே வைக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டு உள்ளது இந்த கோயிலுக்காண தனி சிறப்பாகும்.

தேனி - கே.கே.பட்டி காந்தி கோவில்


இக்கோவிலை அப்போதைய துணை ஜனாதிபதியான வெங்கட்ராமன் திறந்து வைத்தார். இக்கோவில் கட்டுமான பணிக்காக இந்த கிராம மக்கள் பலரும் நன்கொடை வழங்கி உள்ளனர்.

இக்கோவிலில் காந்தி ஜெயந்தி மற்றும் நாட்டின் முக்கிய தேசிய விழாக்கள், தேசிய தலைவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காந்திஜீயின் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து காந்தியை கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

தேனி - கே.கே.பட்டி காந்தி கோவில்


சிறப்பு வழிபாடு :-

சுதந்திர தினம், குடியரசு தினம் நாட்களில் வந்தே மாதரம் முழக்கத்துடன் பொதுமக்கள் காந்தி கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். .

இது போன்ற செயல்பாடுகளால் இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கும், இனிவரும் இளைய சமுதாயத்திற்கும் காந்தியடிகளின் மீதும் நம் தேசத்தின் மீதும் கொண்டுள்ள பற்றை வெளிகாட்டி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

தேனி - கே.கே.பட்டி காந்தி கோவில்


தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் காந்திக்கு கோயில் இருந்தாலும், மகாத்மா காந்திக்கு என்று பிரத்யேகமாக கட்டப்பட்ட கோயில் தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் அமைந்துள்ள இந்த கோவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Theni Gandhi Temple Map
தேனி - கே.கே.பட்டி காந்தி கோவில்


காந்திக்கு என கட்டப்பட்டுள்ள கோயிலை பொது மக்கள் பார்வையிட விரும்பினால் கோயில் பராமரிப்பாளரான ராஜா மற்றும் மகேந்திர பாபு ஆகியோரை 99652 65051 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு பெற்றுக்கொண்டு கட்டணம் இல்லாமல் இலவசமாக பார்வையிடலாம் என தெரிவித்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Cumbum, Local News, Theni

அடுத்த செய்தி