ஹோம் /தேனி /

முழுமை அடையாத சாலை பணியால் அவதிப்படும் கூடலூர் மக்கள்  

முழுமை அடையாத சாலை பணியால் அவதிப்படும் கூடலூர் மக்கள்  

முழுமை அடையாத சாலை பணி

முழுமை அடையாத சாலை பணி

Theni | தேனி மாவட்டம் கூடலூரில் மெத்தனப் போக்கில் நடைபெறும் மாநில நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கூடலூரில் மெத்தன போக்கில் நடைபெறும் மாநில நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி மாவட்டம் கூடலூர் நகர்ப்பகுதி வழியாக கேரள மாநிலத்திற்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கூடலூர் நகர் பகுதியின் வடக்கு காவல் நிலையம் முதல் மந்தை கால்வாய் வரை உள்ள நான்கு கிலோமீட்டர் தூரம் சாலை மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது .

இந்த மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்தி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை கடந்த பல மாதங்களாக நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக நெடுஞ்சாலை துறையினர் சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க : தேனியில் தன்னை கடித்த கட்டுவிரியனுடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞர்... டாக்டர்கள் நடுக்கத்துடன் சிகிச்சை...

சாலை ஓரங்களில் உள்ள மின்கம்புகள் மற்றும் மரங்களை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சாலைப் பணிகளை முழுமையாக முடிக்க முடியாத சூழலில் நெடுஞ்சாலைத் துறையினர் உள்ளனர்.

சாலையை அகலப்படுத்தி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அகற்றப்படாமல் இருப்பதால் கூடலூர் வடக்கு காவல் நிலையம் முதல் மந்தை கால்வாய் வரை முழுமையாக சாலை பணிகள் முடிவடையாமல் உள்ளது. சில இடங்களில் பழைய சாலை தோண்டப்பட்ட நிலையிலேயே உள்ளது.

இந்நிலையில், புதிதாக பாலம் அமைத்து சாலையை அகலப்படுத்தி புதிதாக தார் சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் சாலைகளில் பள்ளம் மேடு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கற்குவியல்களில் வாகனத்தை ஒட்டடிச் செல்கின்றனர்.

இதையும் படிங்க : தேனியில் பள்ளி மாணவர்களுக்கு அயோடின் உப்பு குறித்து விழிப்புணர்வு... உணவு பாதுகாப்பு துறை ஏற்பாடு...

சாலையில் இருந்து பறக்கும் தூசியினால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அவல நிலையும், குடியிருப்பு பகுதிகள் உள்ள மாநில நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்வதால் மண் தூசிகள் பறந்து குழந்தைகளுக்கு ஆஸ்துமா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சாலையின் இருபுறத்திலும் உள்ள மரங்கள் மின்கம்பங்கள் அகற்றப்படுவதற்கு முன்பாகவே நான்கு வழி சாலை அமைப்பதற்கு நடுவில் அமைக்கப்படும் சென்டர் மீடியன் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக முடிவடையாத சாலைக்கு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இருபுறமும் வாகனங்கள் சரிவர செல்ல முடியாத நிலையில் ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி மாணவ மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் தவிக்கும் சுழல் உருவாகியுள்ளதாக கூறுகின்றனர் கூடலூர் பொதுமக்கள்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni