ஹோம் /தேனி /

தேனியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

X
ஓய்வூதியர்கள்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Theni District News : தேனி ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக இன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தினர் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக இன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு ஊதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, நிலுவைகள் மற்றும் புகார் மனுக்களின் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகள் மற்றும் விசாரணை அலுவலர்களின் துறை ரீதியான விசாரணை தாமதம் இன்றி அரசு நிர்ணயித்துள்ள கால வரையறைக்குள் முடித்துவிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் - ஒருவழிப் பாதை விவரங்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அனைத்து துறை அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : சுதர்சன் - தேனி

First published:

Tags: Local News, Theni