ஹோம் /தேனி /

பென்னிகுவிக்கின் 182 ஆவது பிறந்தநாள் - தேனியிலுள்ள நினைவு மண்டபத்தில் குவிந்த மக்கள்

பென்னிகுவிக்கின் 182 ஆவது பிறந்தநாள் - தேனியிலுள்ள நினைவு மண்டபத்தில் குவிந்த மக்கள்

X
பென்னி

பென்னி குவிக் சிலைக்கு மரியாதை

Theni | தேனி மாவட்டத்திலுள்ள பென்னி குவிக்கின் நினைவு மண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அவரது 182-வது பிறந்தநாளை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

பிறந்தநாள் விழா

தேனி மாவட்டம் லோயர் பகுதியில் அமைந்துள்ள ஜான் பென்னிகுவிக் நினைவு மணி மண்டபத்தில் தைத் திருநாளாம் பொங்கல் திருநாள் மற்றும் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான விவசாய சங்கத் தலைவர்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினர்.

பென்னிகுவிக் பிறந்த நாளான நேற்று பென்னிகுவிக் மணி மண்டபத்தில் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்ட பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் வந்து மணிமண்டபத்தை பார்வையிட்டு சென்றனர்.பென்னிகுவிக் விழாவிற்காக மணி மண்டபம் முழுவதும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும் உள்ளது.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கில பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்த நாளான ஜனவரி 15- தேதி அரசு விழாவாக வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கை தேனி மாவட்ட மக்கள் உள்பட ஐந்து மாவட்ட மக்களும் மரியாதைக்குரியவராகவே பார்க்கின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாய சங்கத் தலைவர்களும் பொதுமக்களும் மணிமண்டபத்திற்கு வருகை புரிந்து பென்னிக்குவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவப் பொங்கல் விழா - கம்பத்தில் மதநல்லிணக்கம்

இதனால் பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு மணி மண்டபம் முழுவதும் பல வண்ண விளக்குகளாலும், பூ அலங்காரம் கொண்டு அலங்கரிக்கபட்டு உள்ளது. மணிமண்டபம் வளாகம் நுழைவு வாயிலில் பொதுமக்கள் பொங்கல் வைத்து பென்னிகுவிக் அவர்களை கடவுளாக வழிபட்டனர்.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni