தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கோகிலாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவ, மாணவிகளின் படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டது. பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியையும் படைப்புகளின் கண்காட்சியையும், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கண்டு களித்தனர். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித்திறன் குறித்தும் மாணவர்கள் கல்வி கற்பதை மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் நேரடியாக கண்டனர்.
எண்ணும் எழுத்தும் :
அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் ஒன்றாம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை 8 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுத, படிப்பதை உறுதிசெய்யும் விதமாக 'எண்ணும், எழுத்தும்' திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாகும்.
அதன் அடிப்படையில் இத்திட்டம் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கோகிலாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
படைப்புத்திறன் கண்காட்சி :
இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் படைப்புத்திறன் காட்சி பொருளாக வைக்கப்பட்டு கண்காட்சி நடைபெற்றது. மேலும் மாணவ, மாணவிகள் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. பெற்றோர்கள் முன்னிலையில்,பள்ளி மாணவ மாணவிகள் கவிதை கதை கூறியும், ஆங்கிலம், தமிழ் போன்ற பாடங்களில் இருந்து முக்கிய பகுதிகளை தாங்கள் கற்கும் முறை குறித்தும், விளையாட்டு மூலம் படங்கள் கற்பிக்கும் முறை குறித்தும் செய்து காட்டினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni