முகப்பு /தேனி /

திரிசூல வடிவில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கோலாகலம்!

திரிசூல வடிவில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கோலாகலம்!

X
திரிசூல

திரிசூல வடிவ காளி  

Theni District | தேனி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்திகாளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்திகாளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கூடலூர் வ.உ.சி தெருவில் அமைந்துள்ள இந்த காளியம்மன் கோயிலில் உள்ள காளி, அம்பிகை ரூபத்தில் இல்லாமல், அம்பிகையின் பிரதான ஆயுதமான திரிசூலத்தின் வடிவில் உள்ளது இக்கோவிலின் சிறப்பாகும்.

திரிசூல வடிவ காளி :-

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ளஸ்ரீ சக்தி காளீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பெரும்பாலான கோயில்களில் உருவ வடிவிலான அம்பிகைக்கு பூஜைகள் செய்யப்படும் நிலையில் இக்கோயிலில் அபிஷேக, ஆராதனைகள் பூஜைகள் இந்த திரி சூலத்திற்கே செய்யப்படுகின்றன. இந்த ஸ்ரீ சக்திகாளியம்மன் கோயிலில் உள்ள காளி, அம்பிகை ரூபத்தில் இல்லாமல், அம்பிகையின் பிரதான ஆயுதமான திரிசூலத்தின் வடிவில் உள்ளதால் ஏராளமான பக்தர்கள் தினசரி இக்கோயிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

திருவிழாக் காலங்களில் மட்டும் சூலத்திற்கு அம்பிகை போல முக அமைப்பு கொண்ட அலங்காரம் செய்யப்பட்டு, அம்பாளை வணங்கி வருகின்றனர் இப்பகுதி மக்கள். கூடலுர் பகுதியில் திரிசூல வடிவிலான காளி கோயிலை 13 வருடங்களுக்கு முன்பாக கட்டினர். கடந்த ஆண்டு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பங்குனி திருவிழா :-

திரிசூல வடிவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி காளியம்மன் அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனித் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் . அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா

காப்பு கட்டி, முளைப்பாரி பயிரிடுதலுடன் தொடங்கியது. தினமும் மாலை வேளையில், பெண்கள் முளைப்பயிருக்கு, 'கும்மி' கொட்டி வழிபட்டனர். திருவிழாவின் முதல் நாளில் காளியம்மனுக்கு முகவடிவிலான பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

புனித தீர்த்தம் வைக்கப்பட்ட கரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ' ஓம் சக்தி'.. 'பராசக்தி'.. என்ற கோஷங்கள் முழங்க கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் இரவு பெண்கள் மாவிளக்கு ஊர்வலம் எடுத்து வந்து விளக்கு பூஜை செய்தனர்.

திருவிழாவின் இரண்டாவது நாளில் பெண்கள் அதிகாலை முதலை பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மதிய வேளையில் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. திருவிழாவின் நிறைவு நாளில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

ஆயுதமே இங்கு தெய்வமாக வழிபடுவதால், இங்கு வேண்டிக்கொள்ள, தோஷங்கள் நிவர்த்தியாகி நன்மைகள் நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக மட்டுமில்லாமல், தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பக்தர்கள் நம்பிக்கையாய் இருப்பதால், இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.

பயணம் தடையின்றி தொடர, வெளியூர், வெளிநாடுகளில் இருப்போர் பாதுகாப்புடன் பணிபுரிய, காரியத்தடை நீங்க, எடுத்த காரியத்தில் வெற்றி பெற, குழப்பம் நீங்கி மன அமைதி கிடைக்க, என பல பிரார்த்தனைக்காகவும் பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

top videos

    கோயில் பங்குனி திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் ஸ்ரீகாளியம்மனுக்கு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மஞ்சள் நீராட்டு விளையாடி மன நிறைவுடன் இல்லத்திற்கு சென்றனர்.

    First published:

    Tags: Local News, Theni