ஹோம் /தேனி /

கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் பனை விதை நடும் நிகழ்வு

கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் பனை விதை நடும் நிகழ்வு

காமயகவுண்டன்பட்டி

காமயகவுண்டன்பட்டி

Theni District Latest News | செங்குளம் விவசாய சங்கம் சார்பாக தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் பேரூராட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி பகுதியில் செங்குளம் விவசாய சங்கம் சார்பாக காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் பனை விதை நடவு நிகழ்வு நடைபெற்றது.

காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி பகுதியில் செங்குளம் விவசாய சங்கம், பல்வேறு இயற்கை சார்ந்த நல பணிகளை செய்து வருகிறது. பேரூராட்சி பகுதியில் மரங்கள் நடுதல், பனை விதை நடுதல், விவசாயம் சார்ந்த சேவைகள் என பல்வேறு பணிகளை செய்து வரும் நிலையில் தற்போது காமயகவுண்டன்பட்டி பகுதியில் பனை விதை நடவை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பேரூராட்சி பகுதிகளில் பனை விதைகளை விதைத்து வருகின்றனர்.

அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கூத்தனநாச்சி கோவில் அருகே உள்ள ராமகவுண்டர்குளம் என்ற செங்குளத்தின் சுற்று வட்டார வரப்பு பகுதிகளில் செங்குளம் விவசாய சங்கம் சார்பில் 200க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு நடைபெற்றது.

மேலும் படிக்க:  தேனி மாவட்டத்தில் நிலச்சரிவால் திசை மாறி கேரளாவுக்கு செல்லும் நீர்வீழ்ச்சி..! 

காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி தலைவர் வேல்முருகன் இந்த நிகழ்வை தொடங்கி வைத்து செங்குளத்தில் பனை விதைகளை விதைத்தார். இந்த நிகழ்வில் செங்குளம் விவசாய சங்கத்தின் தலைவர் சரண், பொருளாளர் குமார், காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி தலைவர் வேல்முருகன் , சமூக ஆர்வலர் மற்றும் தேனி மாவட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் நல சங்க தலைவரான அரங்கசாமி மற்றும்  மாணவர்கள் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Theni