தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுபலட்சுமி ரஞ்சித் குமார். இவர் தனது திருமணத்திற்கு பின்பாக சுயமாக ஏதேனும் தொழில் செய்ய வேண்டும் என எண்ணி வீட்டில் இருந்தபடியே பல தொழில்களை செய்ய தொடங்கியுள்ளார். ஆனால் அவற்றில் பெரிதாக எதுவும் வருமானம் கிடைக்காததால் தொடர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இந்நிலையில், சுபலட்சுமி தனது சகோதரியின் உதவியுடன் கேக் தயாரிக்கும் தொழிலை கற்று தொடக்க காலகட்டத்தில் வழக்கமாக பிளாக் பாரஸ்ட் ஒயிட் ஃபாரஸ்ட் உள்ளிட்ட 7 வகையான கேக் மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார்.
இதனை அடுத்து கேக் தயாரிப்பில் பல புதிய ஃப்ளேவர்களை சேர்த்து சிறு தானியங்கள் மூலம் கேக் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கம்பு, கேழ்வரகு, திணை, ராகி உள்ளிட்ட பல்வேறு வகையான சிறு தானியங்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட வகையான கேக் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.
மேலும் படிக்க : எங்கு காணினும் மஞ்சள்.. கம்பம் பகவதி அம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு விழா (புகைப்படங்கள்)
சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கேக் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் இருந்து சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கும் கேக்கிற்கு ஆர்டர் சுப்புலட்சுமிக்கு குவிந்து வந்துள்ளது. இதனை அடுத்து கேக் தயாரிப்பில் புதிய முயற்சியாக பொம்மை உருவம் கொண்ட கேக் தயாரிப்பதிலும் , பொதுமக்களைக் கவர்ந்த கேக் உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளார்.
சிறுதானிய பிஸ்கட்:
அதனை தொடர்ந்து சிறுதானியங்கள் மூலம் பிஸ்கட்டுகளும் தயாரித்து விற்பனை செய்ய தொடங்கிய முதல் நாளிலிருந்து, சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பிஸ்கடக்கான ஆர்டர்கள் குவிந்து வந்துள்ளது. தேனி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சமூக வலைதளங்களில் மூலமாக தொடர்பு கொண்டும் கேக் மற்றும் பிஸ்கட்களை ஆர்டர் செய்வதாக கூறுகிறார் சுபலட்சுமி ரஞ்சித் குமார்.
மேலும் படிக்க : கோவை குருந்தமலையில் உருவான ஹிட் திரைப்படங்களின் லிஸ்ட்- மனதை கொள்ளை கொள்ளும் இடம்!
மேலும் மாதம் சுமார் 60 முதல் 70 கேக்குகள் வரை தயாரிப்பதாகவும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ததன் மூலமாக அதிக ஆர்டர்கள் பெற்றதாகவும் , கேக் மற்றும் பிஸ்கட் கேட்கும் நபர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஆர்டர் தெரிவிக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர் கேட்கும் பொருள்களை தயாரித்து கொடுப்பதாகவும், தேனி மாவட்டத்தில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தனது சகோதரர் உதவியுடன் டெலிவரி செய்து வருவதாகவும் கூறுகிறார்.
தற்போது தேனி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே டெலிவரி வசதியை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் , விரைவில் இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று தமிழகம் முழுவதும் டெலிவரி செய்வதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் கூறுகிறார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சிறுதானியங்கள் மூலம் தயார் செய்யப்பட்ட கேக் விற்பனையில் அசத்தி வரும் இல்லத்தரசியான சுபலட்சுமி ரஞ்சித் குமார் இதன் மூலம் மாதம் 15,000 ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni