ஹோம் /தேனி /

சுருளி மலை ஐயப்பன் கோயிலில் படி பூஜை.. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்பு

சுருளி மலை ஐயப்பன் கோயிலில் படி பூஜை.. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்பு

X
சுருளி

சுருளி மலை ஐயப்பன் கோயில்

Theni District News : தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி மலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஐயப்பனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு,சிறப்பு படி பூஜை நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி மலையில் உள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலில் ஐயப்பனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு , சிறப்பு படி பூஜை நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெரும் ஆண்டு மண்டல மற்றும் அகர விளக்கு பூஜைக்காக ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிப்பதற்காக சபரிமலைக்கு செல்வர்.

ஐயப்பனுக்கு மாலை அணிந்து ஒரு மண்டலம் கடுமையாக விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் அவ்வப்போது ஐயப்பனுக்கு பஜனை பாடியும் , அருகிலுள்ள ஐயப்பன் கோயிலில் வழிபாடு செய்தும் தங்களது விரதத்தை கடைப்பிடிப்பர்.

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயில் சன்னதியில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டாலும் 18 படிகளுக்கு செய்யப்படும் படி பூஜை உலக பிரசித்தி பெற்றது.

இதையும் படிங்க : தேனியில் குருவாக இருக்கும் சிவன்... நாகதோஷம் நீக்கும் தீர்த்ததொட்டி முருகன் கோயில்.!

ஐயப்பன் சன்னதியில் உள்ள விக்கிரத்திற்கு எவ்வளவு சிறப்பு உள்ளதோ அதே அளவு சிறப்பு 18 படிகளுக்கும் உள்ளதாக கூறப்படுகிறது. 18 தத்துவங்களையும், மலைகளையும் தேவர்களையும் ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படிகள் குறிப்பதாக ஐயப்ப பக்தர்கள் கூறுகின்றனர்.

மற்ற நாட்களில் சபரிமலையில் உள்ள ஐயப்பனை விரதம் இருக்காமலும் மாலை அணியாமலும் இருக்கும் பக்தர்களும் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டாலும் இந்த 18 படிகளில் ஏறி ஐயப்பனை தரிசிப்பதற்கு கடுமையான விரதமும் இருமுடி இல்லாமலும் அனுமதிப்பதில்லை. அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த 18 படிகளுக்கு செய்யப்படும் பூஜையே படி பூஜை எனப்படுகிறது.

சபரிமலையில் உள்ள 18 படிகளுக்கு செய்யப்படும் படி பூஜை போலவே தமிழக பகுதியில் 18 படிகளை கொண்ட ஐயப்பன் கோயில்களிலும் படி பூஜை செய்யப்படுகிறது. அந்த வகையில் தேனி மாவட்டம் சுருளி மலையில் அமைந்துள்ள சுருளி மலை ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் படி பூஜை நிகழ்வு நடைபெற்றது .

சபரிமலையில் படி பூஜையின் பொழுது 18 படிகளும் அழகிய விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்படுவது போலவே சுருளி மலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் உள்ள 18 படிகளுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு படி பூஜை செய்யப்பட்டது.

சுருளி மலை ஐயப்பன் ஆலயத்தில் படி பூஜை நிகழ்விற்காக மாலை நாலு மணி அளவில் நடை திறக்கப்பட்டு புஷ்பாபிஷேகத்துடன் படி பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அத்தாழ பூஜை தீபாராதனை நிகழ்வுகளும் நடைபெற்றது . பின் ஹரிவராசனம் பாட்டு உடன் நடை சாத்தப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கோயில் அறங்காவலர் கண்காட்சி கண்ணன் தலைமையில் நடந்த படி பூஜை நிகழ்வுக்காக கம்பம் கூடலூர் சுருளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர் . படி பூஜையில் கலந்து கொண்ட அனைத்து ஐயப்ப பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Theni