Home /theni /

அல்லிநகரம் நகராட்சி சார்பில் தேசியக்கொடி விற்பனை துவக்கம்

அல்லிநகரம் நகராட்சி சார்பில் தேசியக்கொடி விற்பனை துவக்கம்

தேசியக் கொடி விற்பனை

தேசியக் கொடி விற்பனை

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி சார்பில் தேசியக்கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram, India
    மத்திய அரசு 75-வது சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள் உள்பட அனைத்து இடங்களிலும் வருகிற 13-ந் தேதி முதல் 15-ந்தேதி வரை தேசியகொடியை பறக்க விட வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    தேனி மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுவதற்காக பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பில், பொதுமக்களுக்கு தேசிய கொடி எளிதில் கிடைக்கும் வகையில் மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் பணி இன்று தொடங்கியது.

    ஒரு தேசிய கொடி 21 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படுகிறது. நகராட்சி அலுவலகம், பழைய பேருந்து நிலையம் மற்றும் பள்ளி வளாகங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நகராட்சி அலுவலகத்தில் தேசியகொடி விற்பனையை நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா தொடங்கி வைத்தார். அப்போது நகர்மன்ற ஆணையாளர் வீரமுத்துக்குமார், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி