ஹோம் /தேனி /

தேனி : பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

தேனி : பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

X
ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Theni District News : தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் மாநில தழுவிய பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சோபியா ஞானம் மற்றும் மாவட்ட செயலாளர் முத்து மாரியம்மாள் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி எம்ஆர்பி செவிலியர்களுக்கு சம வேலை வாய்ப்பு, சம ஊதியம் வழங்கிட கோருதல். முறையான போட்டி தேர்வின் மூலம் தேர்வு செய்து ஏழு வருடத்திற்கு மேலாக தொகுப்பு ஊதிய முறையில் பணி செய்தல். செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை... முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். கொரோனா காலகட்டத்தில் அவசரநிலை கருதி தொடர் சிகிச்சை வழங்கிய செவிலியர்களை கொண்டு 2500 காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கோரிக்கை மனுவினை ஆட்சி தலைவர் மூலமாக தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தனர்.

First published:

Tags: Local News, Theni