ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

மின்தடை

மின்தடை

Theni : தேனி அருகே உள்ள வடவீரன்நாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

    தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 24) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    தேனி அருகே உள்ள வடவீரன்நாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இதையடுத்து, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரித்துள்ளார்.

    மின் தடை ஏற்படும் இடங்கள்:

    வடபுதுப்பட்டி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி கர்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய வளாகம், தொழில் பேட்டை, சிவாஜி நகர், பாரஸ்ட் சாலை, அரப்படித்தேவன்பட்டி.

    Published by:Ramprasath H
    First published:

    Tags: Local News, Powercut, Theni