பொதுமக்கள் தங்களுக்குள்ள சளி, இருமலை அலட்சியமாக கருதுவதால் அது டிபி நோயாக இருக்கும் பட்சத்தில் குணப்படுத்த முடியாத டிபி நோயாக உருவெடுக்கக்கூடும் என்பதன் அடிப்படையில் தமிழக அரசின் நடமாடும் xray வாகனம் மூலம் இலவச பரிசோதனை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலவச பரிசோதனை முகாம்:
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள 11 வது வார்டு பகுதியில் காசநோய் ஒழிப்பு திட்டத்தின் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் பொது மக்களுக்கு எக்ஸ்ரே எடுத்து இலவசமாக காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது.
பொது மக்களுக்கு காச நோய் பற்றிய விழிப்புணர்வு போதிய அளவு இல்லாததால் காசநோய் ஒழிப்பு திட்டம் ( NTEP ) சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இலவசமாக காசநோய் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சாதாரண சளி, இருமல் இருந்தால் அதனை பொருட்படுத்தாமல் இருப்பதால் பின்னால் அது குணப்படுத்த முடியாத காச நோயாக மாறும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் காசநோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிய தமிழக அரசின் சார்பில் இலவசமாக நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் பொதுமக்களிடம் பரிசோதனை செய்யப்பட்டு, காசநோய் அறிகுறி இருக்கும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பம் வட்டாரத்தில் உள்ள கம்பம் நகர் 11 வது வார்டு முகைதீன் ஆண்டவர் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் "நடமாடும் X RAY வாகனம் மூலமாக பொதுமக்களுக்கு X RAY மற்றும் சளீ மாதிரி எடுக்கப்பட்டது. கம்பம் பகுதியில் தேர்வு செய்யப்பட்ட பொதுமக்களுக்கு காசநோய் உள்ளதா என்பதை சோதனை செய்யும் வகையில் தமிழக அரசின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இலவச நடமாடும் எக்ஸ்ரே சிறப்பு வாகனம் மூலம், காசநோய் இருப்பதாக சந்தேகப்படும் நபர்களுக்கு இலவச எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க | 'ஏலக்காய்க்கு உரிய விலை இல்லை...' சொந்த தோட்டத்தை அழித்த தேனி விவசாயி!
இந்த பரிசோதனை முகாமில் கம்பம் 11 வது வார்டு பகுதியைச் சேர்ந்த 50 நபர்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.தேனி மாவட்ட காசநோய் மையத்தின் துண இயக்குனர் ராஜ பிரகாஷ் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த முகாம் கம்பம் பகுதியில் மாவட்ட நல கல்வியாளர் தர்மேந்திர கண்ணா தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்த முகாமில் காச நோய் மேற்பார்வையாளர் கெளதம், விமலா, முகமது மைதீன் நகர மன்ற உறுப்பினர் சாதிக், சமூக ஆர்வலர் தாஜ் தீன் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Doctor visit, Local News, Theni