ஹோம் /தேனி /

நியூஸ் 18 உள்ளூர் செய்தி எதிரொலி.. காவலருக்கு நிதி உதவி அளித்த கம்பம் எம்.எல்.ஏ

நியூஸ் 18 உள்ளூர் செய்தி எதிரொலி.. காவலருக்கு நிதி உதவி அளித்த கம்பம் எம்.எல்.ஏ

X
காவலருக்கு

காவலருக்கு நிதி உதவி அளித்த கம்பம் எம்.எல்.ஏ

Theni District News : விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் காட்டும் காவலருக்கு கம்பம் எம்.எல்.ஏ நிதி உதவி அளித்து உதவியுள்ளார்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய பசிபிக் மாஸ்டர் போட்டிகளில் பங்கேற்பதற்காக கம்பம் வடக்கு காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் மாரியப்பன் என்பவர் தயாராகி வரும் நிலையில், கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் காவலருக்கு நிதி உதவி அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் காவல்துறையில் பணியில் சேர்ந்த போதும் விளையாட்டுத்துறையில் தனக்கு இருக்கும் ஆர்வத்தால் காவல் பணியில் இருக்கும் போதே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், மத்திய அரசின் மாஸ்டர் கேம் பெடரேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு தேசிய அளவிலான விளையாட்டு போட்டி நடைபெறும்.

இந்த ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மே 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய மாரியப்பன் பல்வேறு போட்டிகளில் மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

இதையும் படிங்க : தேனி-போடிநாயக்கனூர் ரயில் பாதையில் நவீன ஆய்வு - மக்களுக்கு எச்சரிக்கை

இவரது இந்த முயற்சியை தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் உள்ளிட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பாராட்டினர்.

இந்நிலையில். தென் கொரியாவில் நடைபெறும் பசிபிக் மாஸ்டர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக மாரியப்பன் கடுமையாக பயிற்சி செய்து வரும் நிலையில், மாரியப்பன் பயிற்சி மேற்கொள்வதையும் அவருக்கு நிதி உதவி தேவைப்படுவது குறித்த தகவல் நியூஸ் 18 உள்ளூர் தளத்தில் செய்தியாக வெளியிடப்பட்டது.

செய்தி எதிரொலி :

விளையாட்டு துறையில் சாதித்து தமிழ்நாடு காவல்துறைக்கும், தேனி மாவட்ட காவல்துறைக்கும் பெருமை சேர்க்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் மாரியப்பனுக்கு கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் தனது குடும்பத்தின் சார்பாக முப்பது ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி இணை செயலாளர் வசந்தன், தேனி மாவட்ட திமுக துணை செயலாளர் குரு இளங்கோ, கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், கம்பம் வடக்கு தெற்கு நகர செயலாளர்கள் சூர்யா செல்வகுமார், வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நியூஸ் 18 உள்ளூர் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டதை அறிந்து மாரியப்பனுக்கு நிதி உதவி கிடைத்த நிலையில் நியூஸ் 18 உள்ளூர் தளத்திற்கு மாரியப்பன் நன்றி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Theni