ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தில் உருவாகும் புதிய அருவிகள்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

தேனி மாவட்டத்தில் உருவாகும் புதிய அருவிகள்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

தேனி மாவட்டத்தில் உருவாகும் புதிய அருவிகள்

தேனி மாவட்டத்தில் உருவாகும் புதிய அருவிகள்

Theni District News : தேனி மாவட்டத்தில் உருவாகியுள்ள புதிய அருவிகளை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் தற்போது, மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே புதிய அருவிகளும் உருவாகியுள்ளன. இது காண்போர்களையும் வசீகரிக்கிறது.

தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளத்திலும் பருவ மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழக - கேரள எல்லை பகுதியை இணைக்கும் முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் போடிமெட்டு மலைச்சாலை இருந்து வருகிறது. இந்த மலைச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன.

மேலும் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ள மூணாறுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும் போடி மெட்டு இருந்து வருகிறது.

இதையும் படிங்க : வீட்டு மாடியில் மஞ்சள் தடவி காயவைக்கப்பட்ட சிறுத்தை தோல்.. தேனியில் வனத்துறை தீவிர விசாரணை

போடி மெட்டு பகுதியில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக மலைச்சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே 10க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் புதிதாக உருவாகியுள்ளன.

மலைச்சாலை வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் போடி மெட்டு மலைச் சாலையில் பனி மூட்டங்களுக்கு நடுவே சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், மழை தொடர்ச்சியாக பெய்தால், இந்த சாலைகளில் பல்வேறு இடங்களிலும் புதிய தற்காலிக அருவிகள் உருவாகலாம் என்று சுற்றுலா வாசிகளும், இயற்கை வாசிகளும் எண்ணுகின்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni