தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் உள்ளதால் தினசரி ஏராளமான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கம்பம் அரசு மருத்துமனையில் பெரும்பாலான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் 170க்கும் மேற்பட்ட படுக்கை வசதியும் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் 'சீமாங்' சென்டர் வசதி உள்ளது. கம்பம் மருத்துவமனையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கம்பம் அரசு மருத்துவமனைக்கு கம்பம் சுற்று வட்டார பகுதி மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கம்பம் நகருக்கு வருகை புரிந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர்.
இதையும் படிங்க : உடல் அழுகிய நிலையில் 14 நாட்களே ஆன பெண் சிசு மீட்பு... தேனி அருகே அதிர்ச்சி!
கம்பம் அரசு மருத்துவமனைக்கு ஏராளமான உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் வருவதால் செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். சுழற்சி முறையில் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் தங்கும் விடுதி இல்லாமல் இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கம்பம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பொன்னரசன் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தங்கும் விடுதி வேண்டுமென கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
செவிலியர் தங்கும் விடுதி கம்பம் அரசு மருத்துவமனையில் கட்டித்தர வேண்டுமென ஒரு வருடத்துக்கு முன்பு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று கம்பம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி12 லட்ச ரூபாய் செலவில் செவிலியர் தங்கும் விடுதி கட்டிடம் கட்டப்பட்டது.
இதனையடுத்து செவிலியர் தங்கும் விடுதியை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
அடுத்த திட்டங்கள் :
இதுகுறித்து கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “தலைமை மருத்துவர் பொன்னரசனின் கோரிக்கை ஏற்று செவிலியர்கள் தங்கும் விடுதியை கட்டுவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கியதன் அடிப்படையில் புதிய செவிலியர் விடுதி கட்டப்பட்டுள்ளது.
சிறுநீரக செயலிழப்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு கடைசி வாய்ப்பாக சுத்திகரிப்பு என்பது தான் தீர்வாக உள்ளது. இதற்காக போதிய இடவசதி இல்லை என தலைமை மருத்துவர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இந்தாண்டு கம்பம் அரசு மருத்துவமனையில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டப்படவுள்ளது.
இதையும் படிங்க : தேனி சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..
அதேபோல் அடுத்த ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நவீன சமையல் கூடமும் , அதற்கு அடுத்த ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பிரேத பரிசோதனை நிலையத்தில் குளிரூட்டும் மையமும் அமைக்கப்பட உள்ளது” என தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிகழ்ச்சியில் கம்பம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பொன்னரசன், கம்பம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், கம்பம் வடக்கு, தெற்கு நகர செயலாளர்கள் வீரபாண்டியன், சூர்யா செல்வகுமார் மற்றும் திமுக தேனி மாவட்ட துணை செயலாளர் குரு இளங்கோ மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் திமுகவினர் கலந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni