ஹோம் /தேனி /

முடிவுக்கு வருமா டி.சுப்புலாபுரம் விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டம்? நாளை மீண்டும் பேச்சுவார்த்தை..

முடிவுக்கு வருமா டி.சுப்புலாபுரம் விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டம்? நாளை மீண்டும் பேச்சுவார்த்தை..

X
பேச்சுவார்த்தை  

பேச்சுவார்த்தை  

Theni Powerloom workers Strike | தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி . சுப்புலாபுரத்தில் 2000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு, போனஸ், இன்சூரன்ஸ் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

விசைத்தறி தொழிலாளர்களுக்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து நாளை அடுத்த கட்ட   பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு வேண்டி மூன்று நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வந்த நிலையில்  சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வியில் முடிந்தது இதனையடுத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி . சுப்புலாபுரத்தில் 2000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு, போனஸ், இன்சூரன்ஸ் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே கடந்த 2021 ஜனவரி மாதம் போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த 2022 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.

இந்நிலையில் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படாததால் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது .போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக இன்று ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுந்தரலால், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமலிங்கம் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்ளுக்கிடைய பேச்சுவார்த்தை நடைபெற்றது .

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர் . 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில் உடன்பாடு ஏற்படவில்லை . இதனால் இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது . இதையடுத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகின்ற 6ஆம் தேதி (நாளை) மீண்டும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Theni