ஹோம் /தேனி /

தேனி கம்பராய பெருமாள் கோவிலில் நவராத்திரி வழிபாடு- கொலு பொம்மைகளை ரசிக்கும் பொதுமக்கள்

தேனி கம்பராய பெருமாள் கோவிலில் நவராத்திரி வழிபாடு- கொலு பொம்மைகளை ரசிக்கும் பொதுமக்கள்

தேனி

தேனி கோவில் நவராத்திரி விழா

Theni navaratri celebration | தேனி மாவட்டம் கம்பத்தில் மிகவும் புகழ்பெற்ற கம்பராய பெருமாள் கோயிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வழிபாட்டுக்காக கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kambam (Cumbum), India

நவராத்திரி பண்டிகை

இந்துக்களின் முக்கிய பண்டிகையாகவும், இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. துர்கா தேவியை வழிப்படும் இந்த நவராத்திரி பண்டிகையானது 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் ஐந்தாம் தேதியுடன் சரஸ்வதி பூஜை, விஜயதசமியுடன் நிறைவடைகிறது. துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களையும் போற்றும் விதமாக மக்கள் வழிபடுகின்றனர்.

அலங்காரத்தில் சிவன்

அதாவது, சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி ஆகிய 9 தேவிகளையும் நவராத்திரியின் 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளில் பூஜித்து வழிபடுவர். நவராத்திரியின் நிறைவு நாளாக விஜயதசமி அன்று தசரா கொண்டாடப்படும்.

கொலு பொம்மைகள்

ஒன்பது நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும் இவ்விழாவில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்களை வணங்கி வழிபாடு செய்யப்படுகிறது. இந்த நாட்களில் வீடு மற்றும் கோயில்களில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம்.

கம்பராய பெருமாள் கோயில்

அந்த வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தினசரி கோயிலுக்கு சென்று துர்க்கை அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

கோவிலில் வழிபடும் பக்தர்கள்

இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அமைந்துள்ள கம்பராய பெருமாள் கோவிலில் நவராத்திரி பண்டிகை முன்னிட்டு பொது மக்களின் வழிபாட்டுக்காக கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தின் காசி விஸ்வநாதர் சன்னதியின் வடக்கு புறத்தில் அமைந்துள்ள சஷ்டி மண்டபத்தில் 9 படிக்கட்டுகளில் அம்மனின் ஒன்பது அவதாரங்கள் குறித்த கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பூஜைகள் செய்யப்படும் நிலையில், இன்று மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ராஜஅலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

இதில் தமிழர்களின் கலாச்சாரத்தை நினைவுபடுத்தும் விதமாக திருமணம், விளையாட்டு, கரகாட்டம், நிச்சயதார்த்தம் போன்றவற்றைகளை பிரதிபலிக்கும் கொலு பொம்மைகளும், தெப்பக்குளம், பள்ளிக்கூடம், கிளி ஜோதிடம், சலவைத் தொழில், 12 ஆழ்வார்கள், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கொலு பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தது . அதனை தொடர்ந்து ருத்ராட்சலிங்கமும் வைக்கப்பட்டிருந்தது.

தினசரி மாலை நேரத்தில் கம்பராய பெருமாள் கோவில் வைக்கப்பட்ட கொலுபொம்மைகள் மற்றும் அம்மனுக்கு செய்யப்படும் சிறப்பு பூஜைகளை கண்டு வழிபடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செய்கின்றனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni