முகப்பு /தேனி /

பெரியகுளத்தில் இந்திய அளவிலான கூடை பந்தாட்ட போட்டி - விளையாட்டு ரசிகர்கள் உற்சாகம்!

பெரியகுளத்தில் இந்திய அளவிலான கூடை பந்தாட்ட போட்டி - விளையாட்டு ரசிகர்கள் உற்சாகம்!

X
பெரியகுளத்தில்

பெரியகுளத்தில் இந்திய அளவிலான கூடை பந்தாட்ட போட்டி

National Level Basketball Tournament : தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 62ம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 62ம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அளவிலான நடைபெறும் கூடைப்பந்தாட்ட போட்டியானது 7 நாட்கள் வரை நடைபெறவுள்ளது.

காலை மற்றும் மாலை இரவு வேளைகளில் நடைபெறும் இந்த போட்டியில் தேனி, திண்டுக்கல், பெரியகுளம், தூத்துக்குடி, கரூர், உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட தமிழக அணிகளும், கவுகாத்தி, ஹைதராபாத், புனே, கொச்சின், சென்னை, புதுடெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம், தெலங்கானா, வாரணாசி, கோரக்பூர் உள்ளிட்ட மாநில அளவிலான கூடை பந்தாட்ட அணியினரும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

2வது நாளாக நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை தமிழ்நாடு சிறப்பு காவல் படை அணிக்கும், பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் சென்னை தமிழ்நாடு சிறப்பு காவல் படை அணி 77க்கு 42 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

பெரியகுளத்தில் இந்திய அளவிலான கூடை பந்தாட்ட போட்டி

இதையும் படிங்க : 30 ரூபாயில் குடும்பத்துடன் என்ஜாய் பண்ணலாம்..! தென்காசியில் ஒரு நாள் ட்ரிப்புக்கு சூப்பர் ஸ்பாட்..!

இதனைத்தொடர்ந்து 2தாக நடைபெற்ற போட்டியில் சென்னை தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழக அணியுடன் புதுடெல்லி சிஆர்பிஎப் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 82க்கு 75 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 3வதாக சென்னை விளையாட்டு விடுதி அணிக்கும் திண்டுக்கல் கூடை பந்தாட்ட கழக அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், சென்னை விளையாட்டு விடுதி அணி, 70க்கு 60 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

இதனைத்தடர்ந்து நான்காவதாக நடைபெற்ற போட்டியில் கரூர் டெக் சிட்டி அணியிடன், போடி கூடை கொண்டாட்டக் கழக அணியுடனும் நடைபெற்ற போட்டியில், கரூர் டெக் சிட்டி அணி 125க்கு 115 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இரவு பகலாக நடைபெறும் இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Theni