முகப்பு /தேனி /

தேனியில் தேசிய ரத்த சோகை நோய் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம்

தேனியில் தேசிய ரத்த சோகை நோய் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம்

X
தேனியில்

தேனியில் தேசிய ரத்த சோகை நோய் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம்

National Anemia Awareness : தேனி நகரில் ரத்தசோகை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Theni, India

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுஸ் வஸ்தியா யோஜனா திட்டத்தின் கீழ் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம் இணைந்து நடத்தும் ரத்த சோகை விழிப்புணர்வு ஊர்வலம் தேனியில் நடந்தது. இத்திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ரத்தசோகை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை தேனி டிஎஸ்பி பார்த்திபன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் சங்கர் ராஜ் தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் டாக்டர் மீனா குமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேனி பெரியகுளம் சாலை பாரத ஸ்டேட் வங்கி அருகே தொடங்கியஊர்வலம் பழைய பேருந்து நிலையம் நேரு சிலை வழியாக பங்களாமேட்டில் நிறைவடைந்தது.

இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலும் ரத்தசோகை விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் ரத்த விருத்தி மருந்துகளும் விநியோகிக்கப்பட்டது.

First published:

Tags: Local News, Theni