Home /theni /

நரிக்குறவ மக்களுக்கு நடந்த கொடுமைகளை மையப்படுத்தி திரைப்படம்- தேனியில் படபூஜை

நரிக்குறவ மக்களுக்கு நடந்த கொடுமைகளை மையப்படுத்தி திரைப்படம்- தேனியில் படபூஜை

தேனியில் நடைபெற்ற பட பூஜை

தேனியில் நடைபெற்ற பட பூஜை

தேனி மாவட்டத்தில் புதிதாக தொடங்கவுள்ள படத்துக்கான பூஜை நடைபெற்றது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 80 சதவீத புதுமுக நடிகர்களை கொண்டு நரிக்குறவ இன பொதுமக்களுக்கு நடந்த கொடுமைகளை மையப்படுத்தி புதிய திரைப்படம் எடுக்கப்பட உள்ளதற்கான பட பூஜை விழா கம்பம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திரைப்பட பட பூஜை விழா :-

தேனி மாவட்டம் கம்பம் நகரில் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. தேனி மாவட்ட பகுதிகளில் புதிய திரைப்படங்களுக்கு பூஜைகள் நடத்தி ஏராளமான திரைப்பட குழுவினர் படப்பிடிப்பினை நடத்தி வருவது வழக்கம். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள தனியார் திருமண அரங்கில் பெயரிடப்படாத புதிய திரைப்படத்திற்கு பூஜை நடைபெற்றது.

இந்தப் புதிய திரைப்படத்தை எம்.ஆர்.ப்ரொடக்சன் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தினம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுரேஷ் இப்படத்தை இயக்கி வருகிறார்.

படபூஜை


இந்த படமானது தமிழ்நாட்டில் 1973 ஆம் ஆண்டு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நடந்த கொடுமைகளை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 3ஆம் தேதி கோயம்புத்தூரில் தொடங்க உள்ளதாகவும் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

படபூஜை


இந்தப் படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சினிமாவை நேசிப்பவர்களை கொண்ட புதிய முகங்களாகவே இருந்தனர். அவர்களை கொண்டு புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பினை துவங்குவதாக திரைப்பட குழுவினர் தெரிவித்தனர். இப்படத்தின் கதைக்கு ஏற்ப இதுவரையில் சினிமாவில் அறிமுகம் ஆகாத புதிய முகங்களை நடிக்க வைத்து படம் எடுக்க முடிவு செய்ததாகவும், நரிக்குறவர் இன மக்களுக்கு நடந்த கொடுமைகளை உலகுக்கு தெரியப்படுத்தவும் படத்தை இயக்குவதாகவும் படத்தின் இயக்குனர் கூறினார்.

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் 80% பேர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி