தேனி மாவட்டத்தில் பருவ
மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையில் கம்பம், கூடலூர், போடி, சின்னமனூர், உத்தமபாளையம்,தேனி போன்ற பல பகுதிகளிலும் மர்ம காய்ச்சலால் பலர் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொடர் காய்ச்சல் பரவி வருவதால் தேனி மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மழைக்காலங்களில் பரவும் மர்ம காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், மர்ம காய்ச்சலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை பற்றியும் விளக்குகிறார் அரசு மருத்துவர் பாரதி.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :-
மழைக்காலங்களில் பொதுமக்கள் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைப் பற்றி மருத்துவர் கூறுகையில்," காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. சரியான புரிதல் இருந்து, விழிப்புடன் செயல்பட்டால், காச நோய் தொற்றாமல் பாதுகாக்கலாம்.

கம்பம் மருத்துவமனை
தற்போது காலநிலை மாற்றம் காரணமாக, உடலின் வெப்பநிலையை சீராக வைக்க வேண்டும். ஸ்வெட்டர் காலில் சாக்ஸ், கையுறை, போன்றவை அணிவதன் மூலம் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளலாம். அருந்தும் குடிநீரை நன்கு காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும்
அதிக குளிர்ச்சியான பானங்களையும் அதிக சூடான பானங்களையும் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக தாமதிக்காமல் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.
கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து , கொசு உற்பத்தியாவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் துணிகளை மொத்தமாக குவித்து வைத்தல், சிரட்டை, ஆட்டுக்கல், பழைய டயர்களில் தண்ணீர் தேங்குதல், வீடுகளின் முன்பு நீர் தேங்குதல் போன்றவற்றின் மூலம் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே மக்கள் இவற்றை தவிர்க்க வேண்டும்.

மருந்துகள்..
இந்த மழைக் காலத்தில் டெங்கு டைபாய்டு மட்டுமல்லாமல் சாதாரண காய்ச்சலும் பரவி வருகிறது. மக்கள் அனைத்து காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் என நினைத்து அச்சப்பட தேவையில்லை.
பகலில் கடிக்கும் கொசு மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது . மக்கள் பகல் நேரத்திலும் கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகம் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அடிக்கடி கை கழுவுவது, முகக் கவசம் அணிவது மூலமாகவும் மக்கள் காய்ச்சல் நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்கலாம் என்றார்.
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.