முகப்பு /தேனி /

அரை நிர்வாணமாக இறந்து கிடந்த போலீஸ் எஸ்.ஐ மனைவி... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

அரை நிர்வாணமாக இறந்து கிடந்த போலீஸ் எஸ்.ஐ மனைவி... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

X
கொலை

கொலை நடந்த இடம் 

Theni | விசாரணையில் போலீசாரிடம் ஜெயக்குமார் சில திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் 52 வயதாகும் ஜெயக்குமார் . இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில் முதல் மனைவியான 45 வயதாகும் ராணி மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் உத்தமபாளையத்தில் வசித்து வருகின்றனர். ஜெயக்குமார் கம்பம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பொழுது காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த அமுதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் கம்பம் பகுதியில் உள்ள கம்பம் மெட்டு காலனி பகுதியில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். ஜெயக்குமார் தனது இரண்டாவது மனைவியான அமுதா உடன் வசித்து வந்ததால் முதல் மனைவியான ராணி உத்தமபாளையத்தில் தனியாகவே வசித்து வந்துள்ளார் .

ஜெயக்குமார் தனது இரண்டாவது மனைவியுடன் கம்பம் மெட்டு காலனி இரண்டாவது தெருவில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் மார்ச் இரண்டாம் தேதி அமுதாவின் வீடு நீண்ட நேரமாக பூட்டிய இருந்துள்ளது. வழக்கமாக அதிகாலையிலேயே அமுதா வீட்டிலிருந்து வந்து இதர வேலைகளை செய்து வரும் நிலையில் நீண்ட நேரமாக அமுதா வெளியே வராமல் இருந்ததால் அருகில் இருந்த அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அமுதா படுக்கை அறையில் ஆடைகள் இன்றி அரை நிர்வாண நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதையும் படிக்க :  15 வயது சிறுமியுடன் திருமணம் - 20 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

இது குறித்து பொதுமக்கள் கம்பம் வடக்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி காவல் ஆய்வாளர் விஜய் ஆனந்த் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மர்மமான முறையில் இறந்து கிடந்த அமுதாவின் உடலை ஆய்வு செய்தனர்.

விசாரணையில் வெளிவந்த உண்மை :-

அமுதாவின் உடலில் காயங்கள் இருந்ததால் அமுதாவை யாரேனும் அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளரின் மனைவி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரிக்கு தகவல் தெரிவித்தனர் காவல்துறையினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ASP மதுக்குமாரி விசாரணையை துரிதப்படுத்தினார்.

அமுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அமுதாவின் கணவரான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் போலீசாரிடம் ஜெயக்குமார் சில திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஜெயகுமாருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உத்தமபாளையத்தில் உள்ள நிலையில் அவர்களுடன் ஏற்பட்ட வாக்குவதால் அமுதாவுடன் கடந்த சில ஆண்டுகளாக கம்பம் கம்பமெட்டு காலனி பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இரவு நேரங்களில் ஜெயகுமார், அமுதா இருவருக்கும் மது அருந்து பழக்கம் இருந்ததாகவும், சம்பவத்தன்று வழக்கம்போல் ஜெயகுமார் மற்றும் அமுதா மது அருந்தி இருந்த நிலையில் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ஜெயகுமார் அமுதாவை சராமரியாக தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து ஜெயக்குமார் சென்றுள்ளார். ஜெயக்குமார் சரமாரியாக தாக்கியதில் அமுதா உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த அருகில் இருந்தவர்கள் கூறுகையில் , புதன்கிழமை இரவு ஜெயக்குமார் விரைவாகவே மது போதையில் வீட்டிற்கு வந்ததாகவும், அவர் வந்த நீண்ட நேரத்திற்கு பிறகு அமுதா வெளியே இருந்து வந்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்க கூடும் எனவும் தெரிவித்தனர். மேலும் இருவருக்கும் கடந்த ஒரு வார காலமாகவே தொடர் வாக்குவாதம் ஏற்பட்டது எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது .

போக்குவரத்துக் காவல் உதவி காவல் ஆய்வாளர், தனது மனைவியை கொலை செய்த சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது

First published:

Tags: Crime News, Local News, Theni