ஹோம் /தேனி /

முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் இருப்பு குறைகிறது - தேனி விவசாயிகள் கவலை

முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் இருப்பு குறைகிறது - தேனி விவசாயிகள் கவலை

தேனி

தேனி

Mullai Periyar Dam Water Supply Is Decreasing | தென்மேற்கு பருவ மழை தற்போது குறைந்துள்ளது. இதனால் கேரளா மற்றும் தமிழகத்திலும் மழை  பெய்வது குறைந்துள்ளது. இந்நிலையில், முல்லை பெயரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தென்மேற்கு பருவ மழை தற்போது குறைந்துள்ளது. இதனால் கேரளா மற்றும் தமிழகத்திலும் மழை பெய்வது குறைந்துள்ளது. இந்நிலையில், முல்லை பெயரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் தொடர்ச்சியாக மழையும் குறைந்துள்ளது. மேலும் விவசாயிகள் அடுத்த கட்ட சாகுபடிக்கு என்ன செய்து என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க ; மழையே இல்லனாலும் தேனி வைகை அணையில் 70 அடி வரை நீர் இருக்கு...

மேலும், அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை குறைத்து, போதிய அளவு தண்ணீர் அணையில் இருப்பு வைக்க வேண்டும் என்றும் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கன மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணையின் நீர் மட்டம் 137 அடி வரை உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க ப்பட்டது.

தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து 511 கன அடியாக குறைந்துள்ளது. இருந்தபோதும் 1813 கன அடி நீர் திறக்கப்படுவதால் அணையின் நீர் மட்டம் 134.95 அடியாக குறைந்து ள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் உள்ளது.

இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். இதன் மூலம் 2ம் போக நெல்சாகுபடிக்கு அணையில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டபோதும், வைகை அணை யின் நீர்மட்டம் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 70 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு 1579 கன அடி நீர் வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 2069 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. 30 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.11 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni