ஹோம் /தேனி /

142 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் - இனிப்புகள் வழங்கிக் கொண்டாடிய தேனி விவசாயிகள்

142 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் - இனிப்புகள் வழங்கிக் கொண்டாடிய தேனி விவசாயிகள்

X
Theni

Theni | முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் எட்டியதற்கு தேனி விவசாயிகள் வெடி வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Theni | முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் எட்டியதற்கு தேனி விவசாயிகள் வெடி வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதைத் தொடர்ந்து கம்பம் பகுதி விவசாயிகள் கம்பம் நகரில் உள்ள தமிழக பொதுப்பணி துறையினர் அலுவலகம் முன்பு பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.

இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்

தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல்உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மலையின் காரணமாக 141.95 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் உயர்ந்து 142 அடியை எட்டியது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1687.50 கன அடியாக உள்ளது.அணையில் நீர் இருப்பு 7666 மில்லியன் கன அடியாக உள்ளது.

தற்போது அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 750 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடி எட்டியது தமிழக பகுதி விவசாயிகளிடம் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

வெடி வெடிக்கும் விவசாயிகள்

அந்த வகையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதற்காக தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள தமிழக பொதுப்பணி துறையினர் அலுவலகம் முன்பு ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இனிப்பு வழங்கும் விவசாயிகள்

முல்லைப் பெரியாறு அணையை வென்றெடுப்போம் என கோசங்களை எழுப்பியதுடன் தண்ணீர் தேங்குவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக பொதுப்பணித்துறையினர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினார்கள்.

இனிப்பு வழங்கும் விவசாயிகள்

மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கியதற்கு உதவிய தமிழக அரசிற்கும் அரசு அதிகாரிகளுக்கும் தங்களது மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக் கொண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 152 அடி வரை தண்ணீரை தேக்குவதற்கு அனைத்து கட்சி நிர்வாகத்தினரும் உறுதுணையாக இருந்து அணையின் முழு கொள்ளளவை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni