ஹோம் /தேனி /

138 அடியைக் கடந்த முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

138 அடியைக் கடந்த முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

முல்லைப் பெரியாறு அணையில் நீரின் அளவு 138 அடியைக் கடந்துள்ளதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Theni, India

  தமிழகம் மற்றும் கேரளாவில் பருவ மழை தீவிரமாக பெய்து வருகின்றது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அணை, குளம், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றது. இந்நிலையில், முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 138.90 அடியை கடந்துள்ளது. மேலும், அணை அருகே இருக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.90 அடியாக உள்ளது. ரூல்கர்வ் விதிப்படி நவம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை மட்டுமே 142 அடி வரை தண்ணீர் தேக்க முடியும்.

  இதனால் தற்போது அணைக்கு வரும் தண்ணீரின் பெரும்பகுதி கேரளாவுக்கு வீணாக திறந்து விடப்படுகிறது. 9,802 கன அடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 2,122 கன அடி நீரும், கேரளாவுக்கு 3,680 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

  தண்ணீர் வரத்து அதிகரித்ததால் காலை 10 மணிக்கு 4,957 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இது குறித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டு ஆற்றங்கரையோரம் இருக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

  வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது. 2,740 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2,257 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. 46 கன அடி வருகிற நிலையில் திறப்பு இல்லை.

  சோத்துப் பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடியாக உள்ளது. 139 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் குடிநீருக்கும், மீதி உபரியாகவும் திறக்கப்படுகிறது. பெரியாறு 61, தேக்கடி 31.2, கூடலூர் 6.7, உத்தம பாளையம் 1.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Theni