ஹோம் /தேனி /

கூடலூர் பள்ளியில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர்.. ரவீந்திரநாத் எம்.பி திறந்து வைத்தார்..

கூடலூர் பள்ளியில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர்.. ரவீந்திரநாத் எம்.பி திறந்து வைத்தார்..

X
கூடலூர்

கூடலூர்

Gudalur School : தேனியில் பள்ளியில் கட்டப்பட்ட சுற்றுச் சுவர் திறப்பு விழாவில் எம்.பி ரவீந்திரநாத் கலந்துகொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் குமுளி செல்லும் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் என்.எஸ்.கே. பொன்னையா கவுண்டர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு தேவையான கல்வி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் அதிகளவிலான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதியில் பள்ளியின் சுற்றுப்புற சுவர் சேதம் அடைந்து இருந்தது. இதனை அறிந்ததேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், பள்ளியின் சுற்றுப்புறச்சுவரை சீர் செய்து கொடுக்க முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 ன்படிரவீந்திரநாத், தொகுதி மேம்பாட்டு நிதி இருந்துபத்து லட்ச ரூபாய் மதிப்பில் சுமார் பத்தடி உயரத்தில் பள்ளியின் சுற்றுச்சுவரை கட்ட ஒப்புதல் அளித்தார்.

பள்ளியில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை பார்வையிட்டு திறந்து வைப்பதற்காக ரவீந்திரநாத் கூடலூர் பகுதியில் உள்ள பள்ளிக்கு வருகை புரிந்தார். பள்ளி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுச்சுவர் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரவீந்திரநாத், சுற்றுச்சுவர் கட்டப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி ஆணையாளர் காஞ்சனா அதிமுகவை சேர்ந்த சின்ன மாயன், பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கட் குமார், ஆசிரியைகள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Theni