ஹோம் /தேனி /

குமுளி மலைச்சாலையில் விபத்துகளை தடுக்க என்ன தேவை..? வாகன ஓட்டிகள் சொல்வது இதுதான்?

குமுளி மலைச்சாலையில் விபத்துகளை தடுக்க என்ன தேவை..? வாகன ஓட்டிகள் சொல்வது இதுதான்?

X
தேனி

தேனி

Theni District News : குமுளி மலைச் சாலையில் விபத்துகள் ஏற்படுவதைத் தடுப்பது குறித்து வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள குமுளி மலைப் பாதையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. லோயர் கேம்ப்பில் இருந்து குமுளி வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை ஆபத்தான பல வளைவுகளை கொண்டுள்ளது.

தமிழக பகுதியில் இருந்து கேரள மாநிலத்திற்கு தேனி மாவட்டம் வழியாக செல்லும் நபர்கள் குமுளி மலைபாதை வழியாகவே செல்வர். கம்பம் கூடலூர் பகுதியில் இருந்து இடுக்கி மாவட்ட ஏலத் தோட்ட வேலைக்கு செல்வோர், சபரிமலைக்கு செல்வோர் என அனைவரும் இந்த சாலை பயன்படுத்துவதால் பரபரப்பாக இயங்கக்கூடிய சாலையாக உள்ளது குமளி மலை சாலை.

குமுளி மலைச்சாலையில் ஆங்காங்கே கைப்பிடி சுவர்களும் பாலங்களில் உள்ள தடுப்புகளும் சிறிய அளவில் உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சமீபத்தில் குமுளி மலைச்சாலையில் சபரிமலைக்கு சென்று திரும்பிய வாகனம் விபத்துக்குள்ளாக 8 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : நாமக்கல்லில் நிலவும் கடும் பனிப்பொழிவு.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

தடுப்புச் சுவர் பெரிதாக இருக்கும் பட்சத்தில் இந்த விபத்தில் தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் குமுளி மலைச்சாலையில் உள்ள தடுப்புகளை அதிகப்படுத்தி தடுப்புச் சுவரின் உயரத்தையும் அதிகப்படுத்த வேண்டும் எனவும், ஆங்காங்கே குமுளி மலைச்சாலையில் குறுகிய நிலையில் காணப்படுவதால் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவது கடினமான சூழலாக உள்ளது எனவும், ஆங்காங்கே ஒளிரூட்டும் ஸ்டிக்கரும் ஒட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் விபத்துக்கள் குறையும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Theni