ஹோம் /தேனி /

தேனி-போடிநாயக்கனூர் ரயில் பாதையில் நவீன ஆய்வு - மக்களுக்கு எச்சரிக்கை

தேனி-போடிநாயக்கனூர் ரயில் பாதையில் நவீன ஆய்வு - மக்களுக்கு எச்சரிக்கை

ரயில் பாதை சோதனை

ரயில் பாதை சோதனை

Theni District | தேனி-போடிநாயக்கனூர் இடையிலான அகல ரயில்பாதையில், நவீன ஆய்வு ரயில் சோதனை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

மதுரை-போடிநாயக்கனூர் இடையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதை டிசம்பர் 31-2010ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு, அகல ரயில் பாதை திட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்ததன.

இதில் கடந்த மே மாதம் தேனியில் இருந்து மதுரை வரையிலான சேவை தொடங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள தேனி போடி இடையிலான பணிகள் வேகமாக நடைபெற்றன.

இந்நிலையில், போடிநாயக்கனூர்-தேனி வரையிலான ரயில்பாதையில், தண்டவாளம் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, இருப்புப் பாதை சோதனைக்காக ரயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டமும் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர், சில தினங்களுக்கு முன்னர் 120 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது. அபேது போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில், ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெறுவதை காண அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பொதுமக்கள் ரயில் நிலையத்தில் திரண்டு சோதனை ரயிலை கண்டு மகிழ்ந்தனர்.

Must Read : ராமநாதபுரம் சென்றால் இந்த இடத்திற்குப் போக தவறாதீங்க - பிரமிப்பூட்டும் அரண்மனை!

இந்நிலையில், தேனி-போடிநாயக்கனூர் அகல ரயில்பாதையில் நவீன ஆய்வு ரயில் பெட்டி மூலம் 9ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) சோதனை நடைபெறவுள்ளது. அப்போது,15 கி.மீ. தூரத்தை 120 கி.மீ. வேகத்தில் கடந்து சோதனை நடைபெற இருப்பதால், மக்கள் ரயில் பாதையை கடக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Theni, Train