முகப்பு /தேனி /

நவீன வசதிகளுடன் தயாராகும் கம்பம் வாரச்சந்தை.. அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு..

நவீன வசதிகளுடன் தயாராகும் கம்பம் வாரச்சந்தை.. அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு..

X
நவீன

நவீன வசதிகளுடன் தயாராகும் கம்பம் சந்தை

Theni District News | தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிர்ப்புறம் இயங்கி வரும் வாரச்சந்தை போதிய இடவசதி இல்லாமல் உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமையும் அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிர்ப்புறம் வாரச்சந்தை இயங்கி வருகிறது. கம்பம் பகுதியில் தற்போது வாரச்சந்தை இயங்கி வரும் இடத்தில் போதிய இடவசதி இல்லாததால் வாரச்சந்தை வளாக கட்டிடம் வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வியாபாரிகளின் கோரிக்கையின் அடிப்படையிலும் கம்பம் நகராட்சியின் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கத்தோடு, கம்பம் நகராட்சி வார சந்தையினை நவீன கட்டமைப்புகளுடன் கூடிய மேம்பாட்டு பணி கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022 ன் கீழ் சுமார் 775 லட்சம் மதிப்பீட்டில் நவீன வாரச்சந்தை வளாகம் கட்டும் பணிகள் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.

நவீன வசதிகள் :

கம்பம் சந்தையில் மொத்தம் 262 கடைகள், 23 விற்பனை நிலையங்கள், 300 இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், 20 நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறை வசதி, அலுவலகம், கேண்டீன், ஏடிஎம் என பல்வேறு வசதிகள் அடங்கிய வாரச்சந்தை வளாகம் கட்டும் பணிகள் கடந்தாண்டு துவங்கி தற்போது 80 சதவீத பணிகள் நிறைவு பெற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அமைச்சர் கே.என்.நேரு தேனி மாவட்டத்தின் நடைபெறும் பல்வேறு திட்டத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.

இதையும் படிங்க : கொலையில் முடிந்த திருமணத்தை மீறிய உறவு.. பெண்ணை கழுத்து நெரித்து கொலை செய்த எஸ்.ஐ...!

அதன்படி தேனி, போடி, தேவாரம், கடமலைக்குண்டு ஆகிய பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த பின் கம்பம் நகராட்சியில் நடைபெற்று வரும் வாரச்சந்தை வளாக கட்டிட பணிகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வு பணியின்போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை பார்வையிட்டனர்.

மேலும் வாரச்சந்தை வளாக கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு, இதர பணிகளை கேட்டு அறிந்து பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இந்த ஆய்வின்போது தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா, கம்பம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், கம்பம் நகராட்சி கமிஷனர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Theni