முகப்பு /தேனி /

“மினி ராக்கி பாய் சிம்பு” - கே.ஜி.எஃப் சாயலில் பத்து தல படம் இருப்பதாக தேனி ரசிகர்கள் ரிவ்யூ.. 

“மினி ராக்கி பாய் சிம்பு” - கே.ஜி.எஃப் சாயலில் பத்து தல படம் இருப்பதாக தேனி ரசிகர்கள் ரிவ்யூ.. 

X
பத்து

பத்து தல விமர்சனம்

Pathu Thala Movie Review : தேனி மாவட்டத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள பத்து தல திரைப்படம் குறித்து தேனி மாவட்டம் மக்கள் பாசிட்டிவ்வான விமர்சனங்களை தெரிவித்தனர். 

  • Last Updated :
  • Theni, India

நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்கில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. நடிகர் சிம்புவின் ரசிகர்கள் மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு அடுத்தபடியாக மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த பத்து தல திரைப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். புதுமையான தோற்றத்தில் நடித்துள்ள நடிகர் சிம்பு திரையில் தோன்றுவதை கண்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தை கிருஷ்ணா இயக்கி உள்ளார். கன்னடத்தில் வெளிவந்த ‘மஃப்ட்டி’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மற்றும் ஒரு தீம் ம்யூசிக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, சின்னமனூர், தேனி, பெரியகுளம் உள்ளிட்ட இடங்களில்பத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘பத்து தல’ திரைப்படம் தினசரி நான்கு காட்சிகளாக திரையிடப்பட்டுள்ளது . கம்பம் பகுதியில் காலை 10.00 மணி முதல் காட்சிக்கு ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருந்து திரைப்படத்தை காண சென்று , திரைப்படம் முடிந்து வரும் வேளையில் திரைப்படத்தை பற்றி விமர்சனங்களை தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கே.ஜி.எஃப் படத்தை போன்று உள்ளதாகவும் கே.ஜி.எஃப்.வெர்சன் தான் பத்து தல எனவும் ஒரு சில ரசிகர்கள் கூறினர். ‘பத்து தல கெத்து தல’ என்றும்,அதேபோல ஒரு சிலர் படத்தின் கதை எதிர்பார்பை பூர்த்தி செய்து உள்ளது , ஏ.ஆர்.ரகுமான் இசை நன்றாக இருக்கிறது . நடிகர் சிம்புவிற்கு நல்ல படம் எனவும் கூறினர். மேலும் ஒரு சிலர் படம் திரைக்கதை வசனம் பாடல் என அனைத்தும் அருமையாக உள்ளது எனவும் நடிகர் சிம்புவின் நடிப்பு அருமை மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசை அருமையாக உள்ளது எனவும் கே.ஜி.எஃப் போன்று மாஸாக திரைப்படம் அமைந்துள்ளதாகவும் படம் 100 நாள் ஓடும் எனவும் ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

top videos

    வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு முன்னதாகவே இந்த படம் வெளியாகி இருக்கலாம் எனவும் ஒரு சிலர் கருத்து தெரிவித்தனர்.தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மத்தியில் பத்துதல திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது

    First published:

    Tags: Local News, Simbu, Tamil Cinema, Theni