முகப்பு /தேனி /

தேனியில் மினி மாரத்தான் போட்டி.. 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

தேனியில் மினி மாரத்தான் போட்டி.. 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

X
மாரத்தான்

மாரத்தான் போட்டி

Theni marathon | தேனியில் என் எஸ் டி சி - சிஐடியூ திண்டுக்கல் மண்டலம் சார்பில் நடத்தப்பட்ட மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பலர் பரிசுகளை தட்டி சென்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனியில் என் எஸ் டி சி - சிஐடியூ திண்டுக்கல் மண்டலம் சார்பில் நடத்தப்பட்ட மினி மாரத்தான் போட்டியில் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மாரத்தான் போட்டி

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து பனிமனை முன் டி என் எஸ் டி சி - சிஐடியூ திண்டுக்கல் மண்டலம் சார்பில் தேனி மாவட்ட அளவில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது . இந்த மினி மாரத்தான் போட்டியானது சுற்றுப்புற சூழலை பாதுகாக்கவும், பொது போக்குவரத்தை மேம்படுத்தவும், விபத்தில்லா பயணத்தை வலியுறுத்தியும் நடத்தப்பட்டது.

இந்த மினி மாரத்தான் போட்டிக்கு டிஎன்எஸ் டிசி-சிஐடியூ துணை பொது செயலாளர் மணிகண்டன் தலைமையிலும் துணை பொது செயலாளர் கணேஷ்ராம் முன்னிலையிலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் பாலபாரதி மினி மாரத்தான் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தேனி பணிமனை முன்பிருந்து நேரு சிலை வழியாக நகராட்சி அலுவலகம் மற்றும் மருத்துவமனை சாலை சமதர்மபுரம் ஃபாரஸ்ட் ரோடு வழியாக மதுரை சாலை வந்து மீண்டும் தேனி பணிமனையில் 6 கி.மீ. தூரம் ஆண்கள் பிரிவிற்கும், தேனி பணிமனை முன்பு துவங்கி நேரு சிலை வழியாக மதுரை சாலை பங்களா மேடு சென்று மீண்டும் தேனி பணிமனை வரை 3. கி.மீ. தூரம் பெண்கள் பிரிவிற்கும் நடத்தப்பட்டது. பெண்கள் பிரிவில் 150 பேர் பங்கேற்றதில் வடுகபட்டி பாண்டீஸ் முதலாமிடமும், வடுகபட்டி சுகிதா 2ம் இடமும், சின்னமனூர் தீபிகா 3ம் இடத்தை பெற்று வெற்றி பெற்றனர். அதுபோல ஆண்கள் பிரிவில் கூடலூர் வைரபாரதி முதலிடமும், முத்து தேவன்பட்டி அபினேஷ் 2ம் இடமும் சின்னமனூர் சாரூன் குமார் 3ம் இடம் பெற்று வெற்றி பெற்றனர்.

முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.5000 மும், 2ம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.3000மும், 3ம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.2000மும் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை மற்றும் டி என் எஸ் டி சி -சி ஐ டி யு சார்பில் நிர்வாகிகள், விளையாட்டு ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்

First published:

Tags: Athlete, Local News, Theni