ஹோம் /Theni /

போதை ஒழிப்பு மற்றும் இளைஞர் நலனுக்கான மினி மாரத்தான் போட்டி

போதை ஒழிப்பு மற்றும் இளைஞர் நலனுக்கான மினி மாரத்தான் போட்டி

Marathon

Marathon competition 

உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டியில் போதை ஒழிப்பு மற்றும் இளைஞர் நலனுக்கான முதலாமாண்டு மாபெரும் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டியில் போதை ஒழிப்பு மற்றும் இளைஞர் நலனுக்கான முதலாமாண்டு மாபெரும் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.

  மாரத்தான் போட்டி :-

  தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆணைமலையன் பட்டியில் போதை ஒழிப்பு மற்றும் இளைஞர் நலனுக்கான எ.ஒய்.எப்.சி மற்றும் பெத்தேல் கன்ஸ்ட்ரக்சன் சார்பில் முதலாமாண்டு மாபெரும் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.

  போட்டியில் கலந்துகொள்ள அண்டை மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் கேரளாவிலிருந்தும், வெளிமாவட்டமான திருவண்ணாமலை, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பகுதியிலிருந்து இருநூறுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.

  இந்த போட்டியானது ஆணைமலையன்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி சின்ன ஓவுலாபுரம் வரை சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்தினை எல்லையாக கொண்டு நடைபெற்றது.

  இந்த போட்டியில் கோயம்புத்துரை சேர்ந்த ஜெபக்குமார் முதலாவது பரிசினையும், ஸ்ரீவில்லிபுத்துரை சேர்ந்த வேல்முருகன் இரண்டாம் பரிசினையும், வத்தலக்குண்டுவை சேர்ந்த அஜய்குமார் மூன்றாம் பரிசினையும் பெற்றனர். வெற்றிபெற்றவரகளுக்கு ரொக்கப் பரிசினையும், பதக்கங்களையும் வழங்கி சான்றிதழ்களை வழங்கினார்கள்.

  விழாவிற்கான ஏற்பாடுகளை எ.ஒய்.எப்.சி மற்றும் பெத்தேல் கன்ஸ்ட்ரக்சன் சார்பில் செய்திருந்தனர்.

  செய்தியாளர்: சுதர்ஸன்

  Published by:Karthick S
  First published:

  Tags: Theni