ஹோம் /தேனி /

அட இது புதுசா இருக்கே..! கம்பத்தில் வித்தியாசமான முறையில் தாறுமாறாக நடைபெற்ற மைக்செட் போட்டி..

அட இது புதுசா இருக்கே..! கம்பத்தில் வித்தியாசமான முறையில் தாறுமாறாக நடைபெற்ற மைக்செட் போட்டி..

தேனி

தேனி மாவட்டம்

Theni Mic Set Competition : தேனி மாவட்டம் கம்பத்தில் நலிவடைந்து வரும் மைக்செட் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காகவும், போட்டியாளர்கள் தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்காகவும் மைக்செட் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் உள்ள மைக் செட் ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கென ஒவ்வொரு ஆண்டும் நூதனமான மைக்செட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் மைக்செட் உரிமையாளர்கள் அவர்களுடைய மைக்செட்களின் திறனை அறிந்து கொள்ளவும்,  நலிவடைந்து வரும் மைக் செட் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காகவும் இந்த போட்டி நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு மைக்செட் போட்டி கம்பம் நகர ஒலிபெருக்கி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடத்தப்பட்டது.

கம்பம் நகர ஒலிபெருக்கி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தொடர்ந்து 8 ஆண்டுகள் இந்த இசைப் போட்டி திருவிழா நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக 3 ஆண்டுகளாக போட்டி நடைபெறாத நிலையில் 9வது ஆண்டு இசை போட்டி திருவிழா காவல்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் இரண்டு நாட்களாக நடைபெற்றது.

கம்பத்தில் நடைபெற்ற மைக்செட் போட்டி

தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருக்கும் மைக் செட் உரிமையாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சில மாதங்களுக்கு முன்பிருந்தே ஒத்திகையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

கம்பத்தில் நடைபெற்ற மைக்செட் போட்டி

இந்த நிலையில், இந்தப் போட்டியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கம்பம் நகரின் மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் 2 தினங்களாக  நடைபெற்றது. இந்த போட்டியில் 100 க்கும் மேற்பட்ட மைக் செட் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கம்பத்தில் நடைபெற்ற மைக்செட் போட்டி

போட்டி எவ்வாறு நடைபெறுகிறது :-

போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மைக்செட் உரிமையாளரின் பெயர் எழுதப்பட்டு குலுக்கல் முறையில் எதிர் போட்டியாளர் தேர்வு செய்யப்படுவர்.

மலை அடிவாரப் பகுதியில் இரு போட்டியாளர்கள் தங்களது மைக் செட்டை கம்பத்தில் கட்டி பழைய பாடல்களை ஒரே நேரத்தில் ஒலிக்கச் செய்வார்.

கம்பத்தில் நடைபெற்ற மைக்செட் போட்டி

ஒலிபெருக்கி கட்டியிருக்கும் தூரத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் இடைவெளியில் நடுவர் மேடை அமைக்கப்பட்டிருக்கும். இருவரும் ஒரே நேரத்தில் பாடலை இசைக்க செய்யும் பொழுது நடுவர் மேடைக்கு எந்தப் பாடல் துள்ளியமாக கேட்கின்றதோ அவருக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்பட்டு அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். தோல்வியுற்ற போட்டியாளர்கள் களத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்.

முதல் சுற்றில் வெற்றி பெற்ற போட்டியாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு 2-வது சுற்று  நடத்தப்படுகிறது. 2-வது சுற்றிலும் வெற்றி பெறும் நபர்களுக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப் படுகிறது. இதேபோல அடுத்தடுத்து சுற்றில் வெற்றி பெற்று இறுதியாக இருப்பவருக்கு முதல் பரிசு வழங்கப்படுகிறது.

கம்பத்தில் நடைபெற்ற மைக்செட் போட்டி

இந்த ஆண்டு கம்பம் நகரில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசாக 20, 500 ரூபாயும், இரண்டாவது பரிசாக 15,501 ரூபாயும், மூன்றாவது பரிசாக 10,500 ரூபாயும், நான்காம் பரிசாக,5501 ரூபாயும் வழங்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், கம்பம் வடக்கு நகர திமுக பொறுப்பாளர் துரை நெப்போலியன் மற்றும் இதர திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்

போட்டியாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் :-

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இப்போட்டி குறித்து மைக் செட் சங்க தலைவர் கூறுகையில், " மைக் செட் தொழில் தற்போது நலிவடைந்து வருகிறது. அதனை ஊக்குவிக்கும் விதமாகவும், நலிவவடைந்த தொழிலாளிகளுக்கு  உதவும் விதமாகவும், மாவட்டத்தில் உள்ள மற்ற மைக் செட் உரிமையாளர்களின் ஒலி பெருக்கி சாதனம் எந்த அளவிற்கு தரமாக உள்ளது என்பதை அனைத்து மைக்செட் உரிமையாளரும் தெரிந்துகொள்ளும் விதமாகவும் இந்த போட்டி நடைபெற்றது என கூறினார்.

Published by:Arun
First published:

Tags: Local News, Theni