Home /theni /

தேனி ஆட்சியர் அலுவலகம் அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்- பொதுமக்கள் அச்சம்

தேனி ஆட்சியர் அலுவலகம் அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்- பொதுமக்கள் அச்சம்

மருத்துவக்

மருத்துவக் கழிவுகள்

Theni | தேனி ஆட்சியர் அலுவலகம் அருகே கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி ஆட்சியர் அலுவலகம் அருகே கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மருத்துவ கழிவுகள்:

தேனி மாவட்டம் கருவேலநாயக்கன்பட்டி மலையடிவாரத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் பின்புறம் வழியாக செல்லும் பாதையோரம் 25 கிலோவிற்கும் அதிகமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

காலாவதியான மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதோடு அங்கு மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இந்த வழியாகத்தான் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ் பி முகாம் அலுவலகங்கள் உள்ளதால் தினமும் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மற்றும் பொது மக்கள், அரசு அலுவலகம் சென்று வரவும் பிற இடங்களுக்கு சென்று வரவும் பயன்படுத்துகின்றனர் .

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாதையோரம் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுத்துள்ளது அதிர்ச்சிக்குரியதாகவும் முகம் சுழிக்க வைக்கும் விஷயமாகவும் மாறியுள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதார அலுவலர்களை தொடர்பு கொண்ட போது, மருத்துவ கழிவுகளை உடனே அப்புறப்படுத்துவதுடன், கழிவுகளை கொட்டியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி