ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் - தேதி, இடங்கள் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் - தேதி, இடங்கள் அறிவிப்பு

மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளி

Theni District | தேனி மாவட்டத்தின் 8 இடங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதற்கான இடங்கள் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம், மாவட்டத்தின் 8 இடங்களில் நடைபெறவுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மருத்துவ முகாம் வருகிற 11ஆம் தேதி (புதன் கிழமை) தொடங்கி, பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடக்கிறது.

வட்டார அளவில் மாவட்டத்தில் 8 இடங்களில் இந்த முகாம் நடக்கிறது. அதன்படி வருகிற 11ஆம் தேதி கம்பம் உத்தமபுரம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியிலும், 20ஆம் தேதி தேனி பி.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது.

25ஆம் தேதி பெரியகுளம் எட்வர்டு நினைவு நடுநிலைப்பள்ளி, பிப்ரவரி 1ஆம் தேதி மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, 3ஆம் தேதி உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, 8ஆம் தேதி சின்னமனூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, 10ஆம தேதி ஆண்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 15ஆம் தேதி போடி ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.

இந்த முகாம்களின் மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான புதிய தேசிய அடையாள அட்டை, பழைய தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பஸ்களில் பயணம் செய்ய சலுகை சான்றிதழ், ரயிலில் பயணம் செய்ய சலுகை சான்றிதழ், தேவையான அறுவை சிகிச்சை மேற்கொள்வது, தகுதி வாய்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

Must Read : மேகங்கள் விளையாடும் வால்பாறை... 3 நாள் டூர் பிளான் - குடும்பத்தோடு என்ஜாய் பண்ணலாம்!

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் அசல், ஆதார் அட்டை, கல்வி பயிலும் சான்று, புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Physically challenged, Theni