முகப்பு /தேனி /

உத்தமபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

உத்தமபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

X
மாற்றுத்திறனாளிகளுக்கான

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

Theni News | தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் தேனி மாவட்டம் முழுவதும் உள்ள 8 ஒன்றியங்களில் பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெற்று வரும் நிலையில் , உத்தமபாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான புதிய தேசிய அடையாள அட்டை, பழைய தேசிய அடையாள அட்டையை புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைப்பெற நடவடிக்கை , பேருந்துகளில் பயணம் செய்ய சலுகை சான்றிதழ் , ரயிலில் பயணம் செய்ய சலுகை சான்றிதழ், அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல் மற்றும் தகுதி வாய்ந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் இந்த முகாமில் வழங்கப்பட்டது .

தேனி மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை பொறுப்பு அலுவலர் சீனிவாசன் தலைமை நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

First published:

Tags: Local News, Theni