தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முல்லை பெரியாறு தண்ணீர்க்கு அடுத்தப்படியாக விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துவது இங்கு உள்ள குளங்களைத் தான். முல்லைப்பெரியாறு அணை பாசனத்தின் மூலம் 14,707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள சின்னமனூர், கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் முல்லை பெரியாறு பாசனத்தின் மூலம் நெல் விவசாயம் நடைபெறுகிறது. குறிப்பாக கம்பம் பகுதியில் மட்டும் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.
கம்பம் பகுதியில் ஒட்டுக்குளம், கட்டம்தக்குளம், பெரியகுளம், ஓடப்படிக்குளம், வீரநாயக்கண்குளம் என ஐந்துக் குளங்கள் உள்ளன. இக்குளங்களின் பாசனத்தை பயன்படுத்தியும் கம்பம் பகுதியில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த ஐந்து குளங்களும் தற்போது போதிய பராமரிப்பு இன்றியும் தூர்வாரப்படாமலும் உள்ளன.
குளத்தில் கலக்கும் சாக்கடை நீர்
கம்பம் பகுதியில் தற்போது வரை பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டுவரபடாமல் உள்ளதால் கம்பம் பகுதியில் உள்ள சாக்கடைத் தண்ணீர் முழுவதும் இந்த வீரநாயக்கண் குளத்திலேயே கலந்து வருகிறது. இதனால், இக்குளம் முழுவதும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

கழிவுகள் நிரம்பி குளம்
குளங்களில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் இறைச்சி கழிவு மற்றும் கோழிக்கறி கழிவுகளை கொட்டியும் அசுத்தப்படுத்தி வருகின்றனர். இங்கு சாக்கடை நீர் கலப்பதாலும், குப்பைகள் இந்த குளத்திலேயே கொட்டப்பட்டு வருவதாலும் இப்பகுதி முழுவதும் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதாக குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.

சேரும், சகதியுமாக பாதை
மேலும் சாக்கடை நீர் கலப்பதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளதாகக் கூறுகின்றனர். மேலும் குளங்களின் வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதை சேரும் சகதியாக காணப்படுவதால், விவசாய நிலங்களுக்கு டிராக்டர் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத சுழலும் விவசாயிகள் நடக்க முடியாத நிலையும் உள்ளதால் பாதையை சீர்படுத்தி தரவும் கோரிக்கை எழுந்துள்ளது.
நடவடிக்கைத் தேவை
இது குறித்து அப்பகுதி மக்கள் நம்மிடையே கூறியதாவது, "இந்தக் குளம் தூர்வாரப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. மழை பெய்தால் உடனே குளம் உடைந்து விடும் என்று தண்ணீரை திறந்து விடுகின்றனர். ஆழம் இல்லாததால் உடனே நிரம்பி விடுகிறது. சாக்கடை தண்ணீர் முழுவதும் இங்குதான் கலக்கிறது.

வீரநாயக்கன் குளம்
இதனால் துர்நாற்றமும் வீசுகிறது. மேலும், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வீடுகளில் தங்க முடியாத அளவிற்கு கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எங்களுக்கு இந்த குளத்தை தூர்வாரியும், கழிவு நீர் கலக்காமல் இருப்பதற்கு அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.