குறள் நெறி திருமணம் :-
தேனி மாவட்டம் நாகலாபுரத் தைச் சேர்ந்தவர் இளங்குமரன்(57). தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக முப்பது வருடங்களுக்கு முன்பே திருக்குறள் வழியில் திருமணம் செய்து கொண்டார்.
புரோகிதர்கள் இல்லாமல், அக்னி வளர்க்காமல் , இருவீட்டாரின் முழு சம்மதத்தோடு திருக்குறள் சொல்லி அதன் அர்த்தத்தோடு திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இந்த விதமான திருமண முறைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ் கலாச்சாரத்தின் படி திருமண வைபவங்கள் 45 நிமிடங்களுக்குள் திருக்குறள் வழியில் நடத்தி வைக்கப்படுகின்றன.
திருமணம் மட்டுமின்றி புதுமனை புகுவிழா உள்ளிட்ட விசேஷங்களுக்கும் திருக்குறள் வழியாக திறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திருமண வைபவங்களை நடத்தி வைத்துள்ளார் தமிழ் ஆர்வலர் இளங்குமரன். அவ்வாறு நடத்தி வைக்கப்படும் திருமணங்களுக்கோ மற்ற விசேஷங்களுக்கோ எந்த ஒரு தொகையையும் வாங்குவது இல்லை.
விஷேசங்களில் விருப்பத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும் பணத்தினை தமிழ்ச்சங்கம் சம்பந்தமான செலவுகளுக்கு பயன்படுத்தி வருகிறார் இளங்குமரன்.
இதுகுறித்து இளங்குமரன் கூறியதாவது, \" அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்ளும் திருமணமுறை குரல்நெறி திருமண முறையாகும்.
திருக்குறள் வழி திருமணம் என்பது பாரம்பரியமாக நடைபெறும் ஒன்று . அனைத்து மதத்தினருக்கும் பொது உடைமையாக உள்ளதும் இந்த திருக்குறள் வழி திருமணத்திற்கான காரணமாகும். இதுவரை 200 திருமணங்களை நடத்தி வைத்துள்ளேன். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று திருமணங்களை நடத்தி வைத்துள்ளேன்.இந்த வகையான திருமணத்தை பார்க்கும் மக்களும் தங்கள் இல்ல திருமண விழாவும் இதேபோல நடைபெற வேண்டும் என்று கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Theni, Thiruvalluvar