முகப்பு /தேனி /

போடிநாயக்கனூர் பெரிய அங்காள ஈஸ்வரி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்!

போடிநாயக்கனூர் பெரிய அங்காள ஈஸ்வரி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்!

X
போடிநாயக்கனூர்

போடிநாயக்கனூர் பெரிய அங்காள ஈஸ்வரி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்

Theni News : தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சங்கராபுரம் பகுதியில் அமைந்துள்ள பெரிய அங்காள ஈஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சங்கராபுரம் பகுதியில் அமைந்துள்ள பெரிய அங்காள ஈஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று பாதயாத்திரை நிகழ்வு நடைபெறும். இதில் மதுரை மாவட்டத்திலிருந்து கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக பால்குடம் எடுத்தும், காவடியாட்டம் ஆடியும் வந்து வழிபாடு நடத்துவர். அந்த வகையில் இந்த ஆண்டு 37வது ஆண்டாக மகா சிவராத்திரிக்கு பாதையாத்திரை நிகழ்வு நடைபெற்றது.

இதில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் மதுரை மாவட்டத்தில் இருந்து சீலையம்பட்டி வழியாக வந்து சீலையம்பட்டி ஆற்றில் நீராடி பின்பு அங்கிருந்து சங்கராபுரம் பகுதியில் அமைந்துள்ள பெரிய அங்காள ஈஸ்வரி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். இதனைத்தொடர்ந்து அனைத்து பக்தர்களும் அம்மனை தரிசித்து சென்றனர்.

First published:

Tags: Local News, Theni